முதலாவது விடுதலைப் போராளி தியாகி சிவகுமாரனின் 43 ஆம் ஆண்டு நினைவு நாள்...
தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த முதலாவது விடுதலைப் போராளி பொன். சிவகுமாரனின் 43 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நினைவுகூரப்பட்டது.
வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவின் ஏற்பாட்டில் யாழ்.உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலையில் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பொதுச் சுடரினை ஏற்றி வைத்ததுடன், அன்னாரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், உட்பட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம், பரம்சோதி, எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா, உட்பட பொது மக்கள் எனப்பலரும் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன், நினைவுப் பேருரைகளையும் ஆற்றியிருந்தார்கள்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக 05ஆம் திகதி ஜூன் மாதம் 1974ஆம் ஆண்டு சைனைட் அருந்தி தனது உயிரினை ஆகுதி ஆக்கிக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முதலாவது விடுதலைப் போராளி தியாகி சிவகுமாரனின் 43 ஆம் ஆண்டு நினைவு நாள்...
Reviewed by Author
on
June 05, 2017
Rating:

No comments:
Post a Comment