உலகையே அதிர வைத்த ஆய்வு... கொடூரமாக பறிபோன 5 உயிர்கள்
முதலில் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு இது பேய் படத்தின் ஸ்டில் என்றோ... அல்லது பொய்யாக உருவாக்கப்பட்ட புகைப்படம் என்றோ நினைக்க வேண்டாம்.. உண்மையில் இது மனிதன் தான்.
பிறக்கும் பொழுது நன்றாக பிறந்த இவர்களை ஆராய்ச்சி என்ற பெயரில் இந்த அளவிற்கு கொடூரமாக மாற்றியது நவீன ஆராய்ச்சி என்று சொல்ல கூடிய மிருகங்கள் தான்.
1940 வருடம் ரஷ்யா விஞாணிகளுக்கு ஒரு விபரீத எண்ணம் உருவானது. அதாவது சராசரி மனிதனுக்கு இன்றியமையாத ஒரு விஷயம் தூக்கம். அந்த தூக்கம் இல்லாமல் மனிதனால் வாழ முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் ஒரு 1 மாதத்திற்கு மனிதனை தூங்க விடாமல் இருக்க வைத்தால் என்ன நடக்கும் என்று யோசித்தார்கள். இதையே ஆய்வு செய்தும் பார்த்து விடுவோம் என்று முடிவெடுத்தார்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் 5 சிறை கைதிகள்.
இவர்களிடம் ஒரு ஒப்பந்தம் போடபட்டது அதாவது இந்த ஆய்வுக்கு சம்மதித்தால் ஆய்வு முடிந்ததும் அதாவது ஒரு மாதம் முடிந்ததும் விடுதலை செய்து விடுவோம் என்றும் சொன்னார்கள்.
இதற்க்கு மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்ட அந்த ஐவருக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டது.
இதற்காக அரசாங்கத்தின் சார்பில் இவர்கள் அறைக்கு ஒரு மாதகாலத்திற்கு தேவையான சாப்பாடு ,தண்ணீர் ,மற்றும் புத்தகங்கள் மெத்தைகள் இல்லா கட்டில்கள் போன்றவைகள் கொடுத்து.
அந்த அறையில் ஒரு வித வாயுக்கலந்த காற்றை கொஞ்சம் கொஞ்சமாக நிரப்பி விட்டார்கள். அந்த வாயு மனிதனை தூக்கம் வர கூடிய செல்களை தற்காலிக செயல்படாமல் ஆக்கும் என்பதால் அதையும் அந்த அறையில் நிரப்பி விட்டார்கள்..
மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள ஒரே ஒரு இண்ட்ரர்காம் மற்றும் மைக்ரோ போனை மட்டும் கொடுத்து இருந்தார்கள்.
அடுத்ததாக அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு கதவுகளை ஷீல்டு லாக் செய்து விட்டார்கள். இனிமேல் அந்த ஐவரும் நினைத்தால் கூட தூங்கவும் முடியாது வெளியே வரவும் முடியாது. நான்கு நாட்கள் சரியாகவே போனதாக இண்ட்ரர்காம் வழியாக சொன்னார்கள்.
ஐந்தாவது நாள் அந்த ஐந்து பேரில் ஒருவர் தம்முடைய வாழ்க்கையில் நடந்ததாக ஒரு சில விஷயங்களை தன்னையறியாமல் சொல்லி கொண்டே அதாவது உளறி கொண்டே இருப்பதாக சொன்னார்கள்.
5 வது நாளில் சித்த பிரமை பிடித்தது போன்று ஏதேதோ பேசியதாக சொல்கிறார்கள் விஞானிகள்.
7 நாட்களில் அவர்களது குரல் சற்று தொய்வுற்ற நிலையில் கண்டனர்.
10 வது நாளில் கூச்சல் சத்தம் அதிகமாக ஆகியது.
தொடர்ந்து அறையில் பயங்கர சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.
அதாவது எல்லாவற்றையும் போட்டு அடித்து உடைத்துள்ளனர்.
அடுத்த சில நாட்களில் கீச் கீச் என்று சப்தம் மட்டுமே வெளியே வந்தது. இதைக் கண்டு சில ஆய்வாளர்கள் பயந்தனர்.
இப்பகூட ஆய்வாளர்கள்அறையை திறந்து பார்க்காமல் இந்த கீச் கீச் என்று சப்தம் வருவது ஏற்கனவே அவர்கள் போட்ட கூச்சல் சப்தத்தால் அவர்கள் குரல் வலம் கிழிந்து இருக்க கூடும் ஆகவே ஆய்வு தொடர்ந்து நடக்கட்டும் அறையை திறக்க வேண்டாம் என்று முடிவெடுத்தனர்.
அதிலிருந்து 14 நாட்கள் ஆகும் வரையில் அந்த அறையில் இருந்து எந்த சப்தமும் வரவில்லை. இந்நிலையில் விபரீதத்தை உணர்ந்த விஞானிகள் இப்பொழுது அறையில் உள்ள வாயுவை நிறுத்திவிட்டு உள்ளே சென்று பார்த்தனர் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
அங்கே ஐந்து பேரில் ஒருவர் இறந்து போய் விட்டார் இந்த நால்வரும் கடந்த ஐந்து நாட்களாக உணவு உட்கொள்ளாமல் இருந்தனர். இறந்து போனவரின் தொடை சதைகள் மற்றும் மார்பு சதைகள் இல்லாமல் கிடந்தார்.
பின்பு தான் தெரிந்தது கொஞ்சம் கொஞ்சமாக அவரே பிய்த்து எடுத்து இருக்கலாம் என்றும் தெரிகிறது. மீதம் உள்ள 4 பேரின் உடல்களில் தோல்களும் இல்லாமல் தசையும் இல்லாமல் காயங்களுடன் பார்பதற்க்கே கொடூரமான தோற்றத்துடன் இருந்தனர்.
அறை கதவு திறந்து சிலர் வருவதை உணர்ந்த இவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் அவர்களை தாக்க முயன்றனர். நன்றாக அனுபவமுள்ள அதிகாரிகளே இவர்களது தோற்றத்தை கண்டு அருகே செல்லாமல் பயந்து இருந்தனர்..
இந்நிலையில் அந்த நால்வரும் ஒருவரை ஒருவர் அடித்து தாக்கி அட்டகாசம் செய்தனர். ஒட்டுமொத்தமாக சொல்லவேண்டுமென்றால் மனநிலை பாதிக்கப்பட்டு பயங்கர கொடூரமாக இருந்தனர்.
இவர்களை கட்டுப்படுத்த முடியாவில்லை இவர்களால் பேசவும் இயலவில்லை இனிமேல் இவர்களால் எந்த வித பிரயோசனமும் இல்லை என்று, இவர்களை சுட்டு கொன்றும் விட்டனர். இந்த நவீன அறிவியல்.... இப்படி கொடூர ஆய்வு செய்தது கம்யூனிச நாடான சோவியத் ரஷ்யா.
[அறையை திறந்தவுடன் அந்த ஐவரில் ஒருவர் அப்போது எடுத்த புகைப்படம் தான் இது].

உலகையே அதிர வைத்த ஆய்வு... கொடூரமாக பறிபோன 5 உயிர்கள்
Reviewed by Author
on
June 05, 2017
Rating:
Reviewed by Author
on
June 05, 2017
Rating:


No comments:
Post a Comment