6 பேர் பலி...ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பிரபல ஷைட் மசூதியில் தொழுகையின் போது குண்டுவெடித்ததில் 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
காபூலின் தெற்கு பகுதியில் உள்ள அல் சாரா மசூதியில் இந்த தீவிவராத தாக்குதல் நடத்தப்பட்டது. ரமலான் பண்டிகைக்கான சிறப்பு தொழுகை நடைபெற்ற போது அதிகளவிலான மக்கள் கூடியிருந்த இடத்தில் குண்டுவெடித்தது.
இந்த தாக்குதலை அடுத்து சிறப்பு அதிரடிப்படை அல் சாரா பகுதிக்கு விரைந்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நஜீப் தனீஷ் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த தீவிரவாத தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
கடந்த மாதம் லொறி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் பொதுமக்கள் 90 பேர் உடல் சிதறி பலியானார்கள். மட்டுமின்றி 400 பேர் காயமடைந்தனர்.
குறித்த தாக்குதலுக்கும் இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும் தாலிபான் அமைப்பும் மறுப்பு தெரிவித்திருந்தது.
அதேபோன்று மசூதி மீதான இன்றைய தாக்குதலுக்கும் இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
6 பேர் பலி...ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு.
Reviewed by Author
on
June 16, 2017
Rating:

No comments:
Post a Comment