அண்மைய செய்திகள்

recent
-

ஒட்டி பிறந்த குழந்தைகளின் தலை பிரிப்பு: மருத்துவர்கள் மீண்டும் சாதனை...


அமெரிக்காவில் தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு அரிதான அறுவை சிகிச்சை மூலம் இரு தலைகளும் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த Heather மற்றும் Riley தம்பதியினருக்கு கடந்த 2016-ம் ஆண்டு யூலை மாதம் இரட்டை பெண் குழந்தை பிறந்ததது.

ஆனால் இரு பெண்குழந்தைகளின் தலையின் மேல் பகுதியும் ஒட்டியிருந்தன. இக்குழந்தைகளுக்கு Erin மற்றும் Abby Delaney என பெயரிட்டனர். .

இந்த நிலையில் இவற்றை தனித்தனியாக பிரிப்பதற்காக அமெரிக்காவின் பிலடெல்ஃபியா மாகாணத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கடந்த 7-ம் திகதி நரம்பியல் துறை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் 11 மணி நேர அறுவை சிகிச்சை மூலம் இரண்டு தலைகளையும் வெற்றிகரமாக பிரி்த்துள்ளனர்.

இந்த அரிதான சிகிச்சை குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், தலைகள் பிரிக்கப்பட்ட குழந்தைகள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அரிதிலும் அரிதான இது போன்ற அறுவை சிகிச்சை நடந்துள்ளது. லட்சத்தில் ஒருமுறை தான் இது போன்று தலை ஒட்டி குழந்தைகள் பிறக்கும்.

ஏற்கனவே இம்மருந்துவமனையில் வயிறு பகுதி, முதுகு பகுதி, இடுப்பு பகுதி ஆகிய பகுதிகள் ஒட்டி பிறந்த குழந்தைகள் என 23 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன.

இந்த அறுவை சிகிச்சை உலகில் மிகவும் அரிதிலும் அரிதானது என்றனர்.

 



ஒட்டி பிறந்த குழந்தைகளின் தலை பிரிப்பு: மருத்துவர்கள் மீண்டும் சாதனை... Reviewed by Author on June 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.