840 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதியை வெடி குண்டு வைத்து வீழ்த்திய ஐ.எஸ் தீவிரவாதிகள்...
இராக்கில் 840 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதியை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெடி குண்டு வைத்து வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இராக்கின் மொசூல் நகரில் உள்ளது 840-ஆண்டுகள் பழமை வாய்ந்த நூரி மசூதி. இது இத்தாலியில் உள்ள பைசா கோபுரத்தை போன்று தோற்றமுடையது.
இந்நிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நூரி மசூதியை வெடி குண்டு வைத்து வீழ்த்திவிட்டதாக, அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
அதில் கடந்த புதன் கிழமை இராக்கின் மிகவும் பிரசித்தி பெற்ற பாரம்பரியமான சின்னமான நூரி மசூதியை ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து அழித்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஐஎஸ் அமைப்பு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலின் காரணமாகவே மசூதி வீழ்ந்ததாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவோ ஐ.எஸ் அமைப்பு தெரிவித்தது போல், அன்றைய நேரத்தில் நாங்கள் வான்வழித் தாக்குதலை நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது.
840 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதியை வெடி குண்டு வைத்து வீழ்த்திய ஐ.எஸ் தீவிரவாதிகள்...
Reviewed by Author
on
June 22, 2017
Rating:

No comments:
Post a Comment