வவுனியாவில் அணுகு வசதி தொடர்பான விழிப்புணர்வு....
வவுனியாவில் அணுகு வசதிகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழிகாட்டல் செயற்திட்டம் ஒன்றினை மாவட்ட சமூகசேவை அலுவலகம், சீட் நிறுவனம் என்பன இணைந்து மேற்கொண்டுள்ளன.
குறித்த செயற்திட்டம் வவுனியா உள்ளூராட்சி திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் உதவியுடன், வவுனியா மாவட்டத்தில் பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா புகையிரத நிலையம், வங்கிகள், வவுனியா பொலிஸ் நிலையம், வவுனியா தபாலகம், வவுனியா பேருந்து நிலையம், பொதுமலசலகூடங்கள், மீன்சந்தை, மரக்கறிச்சந்தை, சதொச நிறுவனம் என்பவற்றில் இவ்வகை மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக இந்த செயற்திட்டம் வருகின்ற மாதம் வரை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், 2013ஆம் ஆண்டு இவ்வாறான அறிவுறுத்தல்கள் பொது நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.
சதொச கட்டடங்களிலும் இவற்றை நடைமுறைப்படுத்த உள்ளதுடன், தொடர்ந்தும் ஏனைய கட்டடங்களில் இனிவரும் காலங்களில் அணுகுவசதி தொடர்பான விழிப்புணர்வுகளை மற்றைய நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தில் உள்ளூராட்சித் திணைக்கள சிரேஸ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர் வீ.ஜெயசோதி தொழில்நுட்ப உத்தியோகத்தர் இளங்கீரன் மற்றும் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியாவில் அணுகு வசதி தொடர்பான விழிப்புணர்வு....
Reviewed by Author
on
June 23, 2017
Rating:

No comments:
Post a Comment