பிரித்தானிய தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை தமிழ் பெண்!
பிரித்தானியாவில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை வம்சாவளி பெண்ணொருவர் பாரிய வெற்றியை பெற்றுள்ளார்.
தொழிற்கட்சி சார்பில் பிரிஸ்டல் மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட தங்கம் டெபோனயர் என்ற இலங்கைப் பெண்ணே வெற்றி பெற்றுள்ளளார். இவர் 47213 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் 9877 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
தங்கம் டெபோனயர் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஆவார்.
தங்கம் டெபோனயரின் தந்தை ஒரு இலங்கைத் தமிழர். அவரது தாயார் பிரித்தானிய வெள்ளையின பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை தமிழ் பெண்!
Reviewed by Author
on
June 11, 2017
Rating:

No comments:
Post a Comment