வவுனியா மாவட்டத்தின் முதலமைச்சருக்கு ஆதரவாக சுவரொட்டிகள்!
வவுனியா மாவட்டத்தின் சில இடங்களில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி’ எனும் வாசங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி, அரசுக்கூட்டுச்சதியை முறியடிப்போம்’ எனும் தமிழரசுக்கட்சிக்கு எதிரான வாசகங்கள் தாங்கி சுவரொட்டிகள் வன்னி மக்கள் எனும் பெயரில் ஒட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக்கட்சியினாலும், சில வடக்கு மாகாணசபை உறுப்பினர்களாலும் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் அதன் ஒரு கட்டமாக முதலமைச்சருக்கு ஆதரவாக இந்த சுவரொட்டிகள் வவுனியாவில் ஒட்டப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் கறுப்புக் கொடிகளும் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், வட மாகாண முதலமைச்சருக்கு ஆதரவு வழங்கி நாளைய தினம் வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்டத்தின் முதலமைச்சருக்கு ஆதரவாக சுவரொட்டிகள்!
Reviewed by Author
on
June 16, 2017
Rating:

No comments:
Post a Comment