வரலாற்று சாதனை படைத்தார் விராட் கோஹ்லி...
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 8000 ஓட்டங்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோஹ்லி நிகழ்த்தியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி 88 ஓட்டங்கள் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 8000 ஓட்டங்களை அதி வேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
நேற்றைய போட்டி கோஹ்லிக்கு 175வது போட்டியாகும்.
இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்க அணியின் தலைவர் டிவில்லியர்ஸ் 182 போட்டியில் இந்த இலக்கைத் தொட்டதே சாதனையாக இருந்தது. அதை கோஹ்லி முறியடித்து இருக்கிறார்.
28 வயதான விராட் கோஹ்லி இதுவரை 27 சதங்கள், 42 அரை சதங்கள் உட்பட 8,008 ஓட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்று சாதனை படைத்தார் விராட் கோஹ்லி...
Reviewed by Author
on
June 16, 2017
Rating:

No comments:
Post a Comment