100 பேர் பலி லண்டன் தீ விபத்தில் பொலிசார் அதிர்ச்சி தகவல்....
லண்டன் தீ விபத்தில் 17 பேர் பலியாகியுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை 100 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பிரித்தானிய பொலிசார் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.
இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள Grenfell Tower என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு தினங்களுக்கு முன்னர் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
இத்தீவிபத்தில் சில பலர் பலியாகியுள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.
அதிகாரப்பூர்வமாக வெளியான தகவலில் 17 பேர் பலியானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எனினும், தற்போது வெளியாகியுள்ள செய்தியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக பொலிசார் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இத்தீவிபத்திற்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்படும் எனக் கூறியுள்ள பொலிசார் தற்போது விசாரணையை முடக்கி விட்டுள்ளனர்.
தீவிபத்து ஏற்பட்டது முதல் ’உறவினர்களை காணவில்லை’ என பொலிசாருக்கு சுமார் 400 அழைப்புகள் வந்துள்ளன.
தீவிபத்து நிகழ்ந்த கட்டடத்தில் இன்னும் பலரையும் காணவில்லை. தற்போது வரை 6 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.
எனவே, விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 100 வரை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக பொலிசார் கவலை தெரிவித்துள்ளனர்.

100 பேர் பலி லண்டன் தீ விபத்தில் பொலிசார் அதிர்ச்சி தகவல்....
Reviewed by Author
on
June 16, 2017
Rating:

No comments:
Post a Comment