அண்மைய செய்திகள்

recent
-

மாற்றுதிறனாளிகளுக்கு அணுகும் வசதி எல்லா பொது அலுவலகங்களிலும் இருக்க வேண்டும்...



முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான MOTIVATION SRILANKA  நிறுவனத்தினால் நடாத்தப்படுகின்ற PEER GROUP TRAINING-சகபாடிக்குழு பயிற்சி 02-04-06-2017
3நாள் பயிற்சி  மாங்குளத்தில் இருக்கும் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

இதில் பல இடங்களில் இருந்தும் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்று சக்கர நாற்காலியில் தங்கள் வாழ்வை வாழும் பயணாளிகள் கலந்து பயணடைந்தார்கள்.

MOTIVATION நிறுவனத்தில் பணிபுரிகின்ற திரு. முகுந்தன் அவர்களின் மேற்பார்வையில்  திரு.ஜெயக்காந்தன் மற்றும் செல்வி துஷியந்தி ஆகியோர்  ஆகியோர் பயிற்றுவிப்பாளர்களாக செயற்பட்டு பல்வேறு விதமான கருத்துக்களையும் பயிற்சியின் நோக்கம் பற்றியும் பயிற்சி செய்யும் முறை பற்றியும்  தெளிவுபடுத்தினர்.
  • சக்கர நாற்காலி பயணாளிகளின் உரிமைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது
  • அணுகும் வசதி எல்லா பொது அலுவலகங்களிலும் இருக்கவேண்டியது அரசாங்க சட்டம் இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கஎமக்கு அதிகாரம் உள்ளது.
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள்( மாற்றுதிறனாளிகள் மாற்றாற்றலுடையோர்) என அடையாளம் காணப்படுகின்றவர்களுக்கான தேவைகள் வசதிகளை பெற்றுக்கொள்வதற்கானஅதாவது அவர்களின் (சக்கரநாற்காலியில் செல்வதற்கான பாதை 1அடி உயரம் என்றால் நீளம் 12 அடி பாதை இருக்கவேண்டும். இது பாராளுமன்றத்தினால் எற்றுக்கொள்ளப்பட்ட சட்டமாகும்) வழிமுறையான அணுகும் வசதியினை அரச அரசசார்பற்ற திணைக்களங்கள் நிறுவனங்கள் சேவை வழங்கும் அமைப்புகள் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் என்பன முறையன வழியில் நடைமுறைப்படுத்தி இவர்களுக்கு உதவவேண்டும் இவர்களும் எம்மைப்போன்ற தேவைகளையும் சேவைகளையும் பெற்றுக்கொள்ளவேண்டியவர்களே.....
இவர்களும் மனிதர்களே.......

இன் நிகழ்வுக்கு இயன் மருத்துவர் திரு கேதீஸ் அவர்கள் கலந்துகொண்டு அழுத்தப்புண் தொடர்பாகவும் அழுத்தப்புண் காரணமாக ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள் பற்றியும் அதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் பயணாளிகளான எமக்கு எடுத்துக்கூறினார் .

மூன்றாம் நாள் பயிற்சியின் நிறைவில் சான்றிதல்களும் 9 பயணாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டு மன்னாரில் இருந்து கலந்து கொண்ட பெனில் அவர்களின்  நன்றியுரையோடு இப் பயிற்சி நிறைவுபெற்றது.












மாற்றுதிறனாளிகளுக்கு அணுகும் வசதி எல்லா பொது அலுவலகங்களிலும் இருக்க வேண்டும்... Reviewed by Author on June 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.