கன்னியாஸ்திரிகள் ஆடையணிந்து ஷொப்பிங் சென்ற வேற்றுகிரகவாசிகள்: பரபரப்பு தகவல்
ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் அளிக்கின்றனர்.
மேலும், பூமிக்கு வரும் வேற்றுகிரகவாசிகள் மனிதர்களின் போன்ற தோற்றத்தில் இருக்கிறார்கள் என்றும் ஒரு சில வேற்றுகிரகவாசிகள் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார்கள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள நிலையில், கனடா நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளிபால் ஹெல்யர் வேற்றுகிரகவாசிகள் குறித்து புதுவித தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது, இதுவரை 4 வகையான வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வந்து சென்றுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக வேற்றுகிரகவாசிகளின் வருகை அதிகரித்துள்ளது.
பூமிக்கு வரும் வேற்றுகிரகவாசகிள் மனிதர்களின் கண்டுபிடிப்பான அணுகுண்டை பார்த்து வருத்தம் கொள்கிறார்கள், ஏனெனில் அணுகுண்டானது அண்டசராசரத்தில் பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தும் என அவர்கள் நம்புகிறார்கள்.
மேலும், பூமியை பசுமையாக்கும் பல்வேறு யோசனைகள் அவர்கள் வசம் உள்ளன, வேற்றுகிரகவாசிகளால் பருவ மாற்றங்களுக்கு தீர்வு காண முடியும்.
சில வேற்றுகிரகவாசி பெண்கள் அமெரிக்காவின் வெகஸ் நகரில் கன்னியாஸ்திரிகளைப் போல ஆடையணிந்து ஷொப்பிங் சென்றுள்ளனர். அவர்களை நான் பார்த்துள்ளேன், ஆனால் அதற்கான ஆதாரம் என்னிடம் இல்லை. அவர்களை பார்த்த நான் மட்டுமே இதற்கு ஆதாரம் என கூறியுள்ளார்.
கன்னியாஸ்திரிகள் ஆடையணிந்து ஷொப்பிங் சென்ற வேற்றுகிரகவாசிகள்: பரபரப்பு தகவல்
Reviewed by Author
on
June 07, 2017
Rating:

No comments:
Post a Comment