உலகின் அதிசய சிறுவன் மரணம்: தந்தையின் உருக்கமான பேஸ்புக் பதிவு...
அமெரிக்காவில் மூக்கு துவாரங்கள் இன்றி பிறந்த அதிசய குழந்தை எலி தாம்சன் தனது இரண்டே கால் வயதில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் எலி தாம்சன் மூக்கில் துவாரங்கள் இன்றி பிறந்த போது மிகவும் அரிதான குழந்தையாக பார்க்கப்பட்டான்.
அவன் பிறந்த 5வது நாளில் ட்ரக்யோட்டமி அறுவை சிகிச்சை அளித்து மருத்துவர்கள் பராமரித்தனர்.
இந்நிலையில் தற்போது இரண்டே கால் வயதாகும் எலி தாம்சன் மரணமடைந்துள்ளான்.
இதனை தொடர்ந்து தாம்சனின் தந்தை ஜெரிமி பிஞ்ச் பேஸ்புக்கில் உருக்கமான பதிவை எழுதியுள்ளார்.
அவர் கூறுகையில், எனது மகனின் மரணம் என் இதயத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்திவிட்டது.
எனது மகன் பலருடைய இதயத்திற்கு நெருக்கமாக இருந்தான், அவனை பற்றி பலரும் அக்கறை கொண்டிருந்தனர்.
தாம்சன் பிறந்தது எனக்கு கிடைத்த வரம், தன்னுடைய வாழ்கையை விரைவாக தாம்சன் முடித்துக் கொண்டு விட்டான் என கூறியுள்ளார்.
மேலும், என் மரணத்திற்கு பின்னர் சொர்க்கத்தின் வாசலில் நின்று தாம்சன் என்னை வரவேற்கும் நாளுக்காக காத்திருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
உலகின் அதிசய சிறுவன் மரணம்: தந்தையின் உருக்கமான பேஸ்புக் பதிவு...
Reviewed by Author
on
June 07, 2017
Rating:

No comments:
Post a Comment