விரல் நுனியில் பிரம்மாண்டமான தொழில்நுட்பம்....
ஆரம்ப காலங்களில் கணனி உருவாக்கத்திற்கு மிகவும் பெயர் பெற்ற நிறுவனமாக IBM திகழ்ந்தது.
தற்போது கணனிக்குரிய உதிரிப்பாகங்களையும் வடிவமைத்து வருகின்றது.
இந்நிலையில் புத்தம் புதிய கணனி சிப் ஒன்றினை வடிவமைத்துள்ளது. இந்த சிப் ஆனது 30 மில்லியன் ட்ரான்ஸ்சிஸ்டர்களைக் கொண்டுள்ளது.
அத்துடன் இதன் அளவானது ஒரு விரல் நுனி அளவே இருக்கும். அதாவது 5 நனோ மீற்றர்கள் அளவுடைய உலகின் முதலாவது மிகச் சிறிய சிப் ஆகும்.
பன்மடங்கு வினைத்திறன் கொண்ட இந்த சிப்பினை தானியங்கி கார்களில் சிறப்பாக பயன்படுத்த முடியும் என IBM நிறுவனத்தன் ஆராய்ச்சியாளர் குழு தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது உள்ள சிப் உடன் ஒப்பிடும்போது ஒரே மின் வலுவில் செயற்படும்போது 40 சதவீதம் வேகம் உடையதாக காணப்படுகின்றது.
மாறாக மின்சார சேமிப்பினை ஒப்பிடும்போது 75 சதவீதமாக இருக்கின்றது எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
விரல் நுனியில் பிரம்மாண்டமான தொழில்நுட்பம்....
Reviewed by Author
on
June 07, 2017
Rating:

No comments:
Post a Comment