யாழ். மற்றும் கொழும்பை சேர்ந்த இருவருக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வாய்ப்பு....
ஜெர்மன் ஊடக அபிவிருத்திகாக முதன் முறையாக இரண்டு இலங்கை ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பைச் சேர்ந்த டிலிஷா அபேசுந்தர மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சன்முகராசா வடிவேல் ஆகியோரே இந்த விருதிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஊடகவியலாளர்கள் இருவரும் இந்த விருதினைப் பெற்றுக் கொள்வதற்காக ஜெர்மன் செல்லவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜெர்மன் - பேர்லினில் உள்ள ஊடக அபிவிருத்தி அமைப்பு அலுவலகத்தில் இந்த மாதம் 13 ஆம் திகதி இந்த விருது வழங்கி வைக்கப்படவுள்ளது.
கடந்த வருடங்களில் இந்த விருதினை ஈராக், சிரியா மற்றும் சூடான் நாட்டு ஊடகவியலாளர்களே பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், முதன் முறையாக இலங்கை ஊடகவியலாளர்கள் இந்த விருதிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பெர்லினை அடிப்படையாக கொண்ட ஊடக அபிவிருத்தி அமைப்பு, ஊடகவியலாளர் மற்றும் ஒத்துழைப்பு ஊடகங்கள் இணைந்தே இந்த விருதினை வழங்கி வருகின்றது.
மேலும்,குறித்த இருவரும் ஊடக அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பிலான செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே, குறித்த இருவரும் இந்த விருதிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 400,000 யூரோவைக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டது.
சமநிலைப்படுத்தப்பட்ட பத்திரிகையை உருவாக்குவதன் மூலம் இனத்துவ சமூகங்களுக்கிடையே பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதோடு, தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகளை மேம்படுத்தலே இந்த திட்டத்தின் நோக்கமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். மற்றும் கொழும்பை சேர்ந்த இருவருக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வாய்ப்பு....
Reviewed by Author
on
June 09, 2017
Rating:

No comments:
Post a Comment