அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு; விசேட அமர்வு 14ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு...
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கலந் துரையாடுவதற்காக வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வு மீண்டும் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடக்கு அமைச்சர்கள் மீது மேற்கொள் ளப்பட்ட விசாரணையின் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக வடக்கு மாகாண சபை நேற்றையதினம் முதலமைச்சரின் பங்கேற்புடன் கூடியது. இதில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் கோரிக்கைகளை அடுத்தே எதிர்வரும் பதின்நான்காம் திகதிக்கு சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட விசாரணைக்குழுவின் அறிக்கை நேற்றையதினம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரனால் வடக்கு மாகாண அவைத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
முதலாவது வடக்கு மாகாண சபையின் 95 ஆவது அமர்வு நேற்றையதினம் இடம்பெற்றது. அதன் போதே மேற்படி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக பலவிதமான குற்றச்சாட்டுக்கள் கிடைத்ததன் விளைவாக மூவர் அடங்கிய ஒரு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப் பட்டது. அதில் இருவர் ஓய்வுபெற்ற மேல் நீதி
அதில் இருவர் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஒருவர் இளைப்பாறிய இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி உட்பட்ட மூவர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
விதிமுறைக் குறிப்புக்கள் கொடுக்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் மூடிய அறையில் விசாரணைகள் நடைபெற்றன. ஊடகங்களுக்கு தகவல்கள் வழங்கப்படாது என்ற நிபந்தனையின் பேரில் விசாரணைகள் நடை பெற்றன.
நான்கு அமைச்சர்களும் குழுவின் அதிகாரத்தை ஏற்று சாட்சியமளித்திருந்தனர். மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக, வாணிபம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சரு க்கு எதிராக 4 குற்றச்சாட்டுக்களும் சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுக்களும் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர்; விவகார அமைச்சருக்கு எதிராக 9 குற்றச்சாட்டுக்களும் விவசாய கமநலசேவை, கால்நடை அபிவிருத்தி, நீர்வழங்கல், உணவு வழங்கல் விநியோகித்தல், சுற்றாடல் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்களும் கிடைக்கப் பெற்றன.
விசாரணைகள் முடிவுற்று அவர்களின் அறிக்கை கடந்த மாதம் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. முதலில் முதலமைச்சரால் அந்த அறிக்கை 4 அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அறிக்கையின் உள்ளடக்கங்கள் சில ஊடகங்கள் வாயிலாக கசியவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முதலமைச்சரால் குறித்த அறிக்கை அவையில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் முதலமைச்சரின் வருகை இன்றி அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. அந்த நிலையில் நேற்றைய தினம் விசேட அமர்வு ஏற்படுத்தப்பட்டு முதலமைச்சரால் அறிக்கை அவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அறிக்கையின் பிரதிகள் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் அறிக்கை பற்றிய தமது விளக்கங்களை எழுத்து மூலம் முதலமைச்சருக்கு எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். அறிக்கை குறித்த கருத்து பரிமாற்றம் எதிர்வரும் 14 ஆம் திகதி விசேட அமர்வில் நடைபெறும் என அவைத் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு; விசேட அமர்வு 14ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு...
Reviewed by Author
on
June 09, 2017
Rating:

No comments:
Post a Comment