கிளி. முழங்காவில் பொலிஸ் நிலையம் பொது மக்களால் முற்றுகை!
கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் நிலையம் பொது மக்களால் முற்றுகையிடப்பட்டு இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
300க்கும் மேற்பட்ட பொது மக்கள் நாச்சிக்குடா சந்தியில் இருந்து முழங்காவில் பொலிஸ் நிலையம் வரை பேரணியாக சென்று, பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி இரவு முழங்காவில் பகுதியில் மன்னாரில் இருந்து வந்த கார் மோதியதில் 13 வயதான அ.அபினேஸ் என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். எனினும், விபத்தை ஏற்படுத்திய சாரதி காருடன் தப்பியோடியிருந்தார்.
அந்த காரின் இலக்கத்தகடு விழுந்து கிடந்த நிலையில், அதனை பொலிஸாரிம் ஒப்படைத்த சிறுவனின் உறவினர்கள் முறைப்பாடும் செய்திருந்தனர்.
எனினும், பொலிஸார் நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், இன்றைய தினம் பொது மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளி. முழங்காவில் பொலிஸ் நிலையம் பொது மக்களால் முற்றுகை!
Reviewed by Author
on
June 22, 2017
Rating:

No comments:
Post a Comment