பட்டதாரிகளின் விபரீத முடிவிற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்...
வேலையற்ற பட்டதாரிகளில் எவராவது விபரீதமான முடிவினை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பினையும் அரசாங்கமும், அரசியல்வாதிகளுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரக போராட்டம் 122ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் அவர்கள் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
நாங்கள் மேற்கொண்டு வரும் தொழில் உரிமைக்கான போராட்டம் பல்வேறு அழுத்தங்களுக்கும் மற்றும் மன உளைச்சலுக்கும் மத்தியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான எந்தவித ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளையும் மத்திய மாகாண அரசாங்கங்கள் இது வரையில் ஆரம்பிக்காமல் இருப்பது எமக்கு கவலையளிக்கின்றது.
இருப்பினும் பல்வேறு கருத்துக்கள் மாகாணசபையினால் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையிலும் இது வரையில் உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
அத்துடன் மத்திய அரசாங்கத்தினால் பல்வேறு உறுதிமொழிகள் எமக்கு வழங்கப்பட்ட போதிலும் இதுவரையில் அதனை நிறைவேற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை.
இவ்வாறான நிலையில் எந்த பட்டதாரியாவது விபரீதமான முடிவினை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பினையும் மத்திய மாகாண அரசுகளும் எமது அரசியல்வாதிகளும் ஏற்கவேண்டும் எனவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
பட்டதாரிகளின் விபரீத முடிவிற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்...
Reviewed by Author
on
June 22, 2017
Rating:

No comments:
Post a Comment