மன்னாரை அழகுபடுத்துவோம் ஒன்றிணைவோம் வாரிர்.....இளைஞர் யுவதிகளே
வாழும் எமது மாவட்டமானது அழகாய் இருக்கவேண்டுமல்லவா...... அப்படி இருக்கின்றதா….. இல்லையே….. அதற்கு முழுப்பொறுப்பும் நாம் தான் நமது விடுவாசல் காணிதோட்டம் துறவு என்பனவற்றினை எப்படி அழகுபடுத்துகின்றோம். துப்பரவாக வைத்திருக்கின்றோம். பார்பதற்கு அழகாகவும் பார்ப்பவர்கள் விரும்பும்படியும் வைத்திருக்கின்றோம் அல்லவா…..எமது வீடுவாசல் காணி தோட்டம் துறவுகள் எங்குள்ளது.
மன்னார் மண்ணில் தானே அந்த மண்துப்பரவின்றி அசுத்தமாக வேறுமாவட்டத்தினைச்சேர்ந்தவர்கள் பார்பதற்கு அருவருப்பாக ஏளனமாக கதைப்பதற்கு இடங்கொடுக்கலாமா…..கொஞ்சம் சிந்தியுங்கள்
மாணவமாணவிகளே இளைஞர்யுவதிகளே பெற்றோர் பெரியோர்களே தொழிலாளர்களே முதலாளிகளே அமைப்புக்களே அரசஅரசசார்பற்றஅதிகாரிகளே எண்ணிப்பாருங்கள் நீங்கள் வசிப்பதும் வாழ்வதும் இந்த மன்னார் மண்ணில் தானே…..அப்படியாயின் இந்த மன்னார் மாவட்டமண் எப்படியிருக்கவேண்டும் கொஞ்சம் சிந்தியுங்கள் செயலாற்றுங்கள்……
- மன்னார் பாலத்திற்கு அருகில் கிடக்கின்ற பழையபாலத்தின் இருந்து களட்டிய பழைய கறல்பிடித்த இரும்புகள் அகற்றப்படவேண்டும்.
மன்னார் நீதிமன்றவளாகத்திற்கு முன்னாள் கிடக்கின்ற வாகனங்களும் மணல் மரக்குற்றிகள் ஏனையபொருட்கள் இடமாற்றவேண்டும்.
மன்னார் இராணுவபழையகட்டிடத்தொகுதிக்குமுன் உள்ள மரக்கறிச்சந்தைக்கொட்டிலும் பழைய தகரத்தினால் அடைக்கப்பட்டுள்ள அலுவலகமும் அழகுற அமைக்கவேண்டும்.
மன்னார் ரெலிக்கொம் பிரதான ரவரை சுற்றியுள்ள பகுதி எவ்வளவு அசுத்தமாகவுள்ளது. இதன் முன்னால் ரெலிக்கொம் அருகில் மீன்பிடி மற்றும்போக்குவரத்து கிராமிய அமைச்சின் உபசெயலகம் அத்தோடு ஞானவைரவர் ஆலயமும் உள்ளது இப்படி இருப்பது அழகாய் இருக்கின்றதா…
மன்னார் எங்கும் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் பதாதைகள் விளம்பரப்பலகைகள் பெனர்கள் பாரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது தற்போது கிழிந்து தும்புதும்பாய் தொங்குகின்றது(பிரதான வீதியில் ஜோதிபுத்தகசாலை கட்டிடத்திற்கு மேலே உள்ள நெஸ்ரமோல்ட் விளம்பரபெனர் கிழிந்த ஒரு துண்டு கீழே விழுந்து சிறிய விபத்து ஏற்பட்டுள்ளதூக முறைப்பாடு)
மன்னார் பிரதான வீதிகளில் பார்வை படும்பகுதிகளில் உள்ள பழைய தகரம் ஓலை போரவாக் காட்போட் பெனர் கொண்டு அமைக்கப்பட்ட வேலிகள் ஏனையவை மாற்றியமைத்தால் அழகு தரும் அல்லவா…
மன்னார் கடற்கரையில் உள்ள உடைந்த சிதைந்துபோன வள்ளங்கள் கப்பல்கள் வலைகள் மற்றும் மீன்கழிவுகள் என்பன அகற்றப்படவேண்டும்.
வீதிஅபிவிருத்திப்பணிகளின் போது தோண்டப்பட் பெரும்மரங்கள் கல்லுகள் கழிவுமணல்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும்.
நீர்தேங்கி நிற்கின்ற காண்கள் குழிகள் சுத்தப்படுத்துவதோடு மூடாமல் கிடக்கின்ற காண்களை குழிகள் மூடவேண்டும்.
மன்னாரில் உள்ள பலசரக்குகடைகள் மரக்கறிக்கடைகள் புடவைக்கடைகள் சாப்பட்டுக்கடைகள் ஏனையகடகைள் அரசஅரசசார்பற்ற நிறுவனங்கள் தங்களிடம் இருந்து வெளிப்படும் கழிவுகளை உரியமுறையில் எரித்தலோ நகரசபைதுப்பரவுப்பணியாளர்களிடம் கையளித்தல் முக்கியமானவிடையமாகும்.
வீதிகளில் பொலித்தீன் மற்றும் ஏனைய குப்பபைகளையும் வீட்டுக்கழிவுகளையும் கழிவு நீரினையும் ஊத்துதுலும் வீசுதலை தவிர்க்கவும்.- வீதியின் அருகில் வெற்றிலை எச்சில் துப்புதல் மலம்சலம்கழிக்கும் அநாகரிச்செயல்களை தவிர்த்தல்.
- போத்தல்கள் கண்ணாடித்துண்டுகளை வீதிகளில் வீசுதல் உடைத்தலும் சிறிய இரும்பு பொருட்களை வீசுதலையும் தவிர்த்தல.
- எமது வளவிலும் வீதிகிளின் அருகிலும் புல்பூண்டுகள் பற்றைகள் முள்மரங்களை வளரவிடாது வெட்டுதல் வேண்டும்.
தண்ணீர் தேங்கிநிற்கா வண்ணமும் டெங்கு நுளம்புபெருகாவண்ணமும் பாதுகாத்தல் வேண்டும்.
மேலே சுட்டக்காட்டிய விடையங்களினால் நாம் சுவாசிக்கும் காற்றினை அசுத்தபடத்துகின்றோம் அதேவேளை பொலித்தீன் பாவனையால் மண்ணில் புதைகின்ற பொலீத்தீன்களால் மண்ணின் விளைச்சல் இல்லாமல்போவதோடு எண்ணெய்மசகு கழிவுகளாலும் மண்ணுக்குள் அடியில் நீரூற்றுக்கள் தடைப்படும் இதனால் இன்னும் வெப்பமான நிலை உருவாகும்.
நாம் முதலில் எமது அறையில் வீட்டில் வளவில் தெருவில் இருந்து ஆரம்பிப்போம் இவ்வாறு ஒவ்வொருவரும் ஆரம்பித்தால் நாம் சந்திக்கும் இடம் துப்பரவான மன்னார் மண்ணின் நடுப்பகுதியாகும்.
நகரசபையும் பிரதேசசபைகளும் இணைந்து கழிவுகளை அகற்றலும் கழிவுகள் போடுவதற்கு தொட்டிகள் அமைத்தல் அதைதுப்பரவு செய்தல் வேண்டும்.
அல்லவா…முடியுமா…. முடியாத…. ஏன் முடியாது என்ற கேள்வி எழுகினறதா…..???
- மன்னார் மாவட்டத்தின் எல்லாப்பகுதிகளும் நகரம் கிராமம் என்றில்லாமல் தான் குறிப்பாக
- மன்னார் பொதுவைத்தியசாலை
மன்னாரில் உள்ள பாடசாலைகள்
மன்னாரில் உள்ள அனைத்து சுடலைகள் சேமக்காலைகள்
மன்னாரில் உள்ள வழிபாட்டுத்தளங்கள் பாவிக்காது உள்ள சிறுவர்பூங்காக்கள் வாசிகசாலைகள் விளையாட்டு மைதானங்கள் வளவுகள் ஏனைய இடங்கள் என்பன. துப்பரவுப்பணி ஆரம்பித்தால்.
இங்கே தரப்பட்டிருக்கும் புகைப்படங்களை விடமோசமான இடங்களும் உண்டு அது உங்களுக்கே தெரியும் சின்ன முயற்சி செய்வோம்.
அழகாய் மன்னார் ஒளிரும்
இளம்கவிஞர் -வை.கஜேந்திரன்-

மன்னாரை அழகுபடுத்துவோம் ஒன்றிணைவோம் வாரிர்.....இளைஞர் யுவதிகளே
Reviewed by Author
on
June 30, 2017
Rating:

No comments:
Post a Comment