குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இரண்டு மடங்கு பணம் தருவேன் – டெனீஸ்வரன்!
தான் ஊழல் செய்திருந்து, தன்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், நிரூபிக்கப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு பணம் தருவதாக வடமாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தன்மீது முறைப்பாடு செய்துள்ள சாட்சியாளது விசாரணையன்று தான் ஜெனீவாவில் நிற்பதாகத் தெரிவித்தார். ஆனால் அவர் அன்று ஜெனீவாவில் நிற்கவில்லையெனவும், யாழ்ப்பாணத்திலேயே நின்றார் எனவும் அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்தார்.
என்மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றசாட்டு முறையான விசாரணைக் குழு மூலமாக நிருபிக்கப்பட்டால் அந்தத் தொகையின் இரண்டு மடங்கை நான் தருவேன். இன்னமும் நான் பயன்படுத்தும் வாகனத்துக்கு எரிபொருள் செலவு போதாமல் உள்ளது. ஒரு மாதத்துக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா தேவைப்படுகின்றது என்பதை யாரும் அறிய மாட்டார்கள். இது எனக்காக ஒதுக்கப்பட்ட எரிபொருள் செலவை விட அதிகமாகவே எனக்குச் செலவு ஏற்படுகின்றது. இது தொடர்பாக நான் முதலமைச்சரிடம் தெரிவிப்பேன்.
அத்துடன், வடமாகாண முதலமைச்சர் சட்டவலுவுள்ள ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை நடாத்தினால் தான் ஒரு மாதமல்ல இரண்டு மாதங்களாயினும் விடுமுறையில் செல்வதற்குத் தயாராக இருக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Reviewed by NEWMANNAR
on
June 25, 2017
Rating:

No comments:
Post a Comment