அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி.....
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிருக்கான உலக்கிண்ணம் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தில் மகளிருக்கான 50-ஓவர் உலகக்கிண்ணம் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், இந்திய அணியும் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன் படி இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக பூனம் ரவுட் மற்றும் ஸ்மிரிதி மந்தனா களமிறங்கினர்.
இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆடினர். இதனால் இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 144-ஓட்டங்கள் குவித்தது, ஸ்மிரிதி மந்தனா 90 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணிக்கு பூனம் ரவுட்(86), மிதாலி ராஜ்(71),ஹர்மன்பிரீத் கவுர் 24 ஓட்டங்கள் எடுக்க, இந்திய அணி 50-ஓவர் முடிவில் 3-விக்கெட் இழப்பிற்கு 281-ஓட்டங்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணி சார்பில் ஹிதர் நைட் 2-விக்கெட்டுகளும், டெனியல்ல ஹசில்ல 1-விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 282-ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்கமே ஆட்டம் கண்டது.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 47.3-ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246-ஓட்டங்கள் எடுத்து 35-ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இங்கிலாந்து அணி சார்பில் தலைவர் ஹீத்தர் நைட் 46 மற்றும் ப்ரான் வில்சன் 81 ஓட்டங்கள் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளும் ஷிகா பாண்டே 2 விக்கெட்டுகளும் மற்றும் பூனம் யாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி.....
Reviewed by Author
on
June 25, 2017
Rating:

No comments:
Post a Comment