வடமாகாண சபையின் புதிய அமைச்சர்களாக அனந்தி மற்றும் சர்வேஸ்வரன் பதவியேற்பு
வடமாகாண சபையின் புதிய அமைச்சர்களாக அனந்தி சசிதரன் மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோர் இன்று காலை ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.
அந்த வகையில் மகளிர் விவகாரம், சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக அனந்தி சசிதரனும், கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக கந்தையா சர்வேஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், விவசாய கால்நடை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, புதிய அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் நேற்று மாலை முதலமைச்சர் மற்றும் அவருக்கு ஆதரவான உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இந்த சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் புதிய அமைச்சர்கள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அத்துடன் குறித்த இரு அமைச்சர்களும் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே குறித்த இரு அமைச்சர்களும் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே முன்னிலையில் அவரது அலுவலகத்தில் பதவிகளை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
வடமாகாண சபையின் புதிய அமைச்சர்களாக அனந்தி மற்றும் சர்வேஸ்வரன் பதவியேற்பு
Reviewed by NEWMANNAR
on
June 29, 2017
Rating:

No comments:
Post a Comment