நினைவேந்தல் செய்தவர்கள் குண்டர்களா? யாழில் பாரிய ஆர்ப்பாட்டம்
ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்தமைக்காக திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைதானமையைக் கண்டித்து யாழில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
“பாரத தேசத்திற்கு விடுதலை பெற்றுக்கொடுத்த காந்திக்கே சிறையா, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை விடுதலை செய், ஈழத்தமிழர்களின் ஆதரவாளனை விடுதலை செய், நினைவேந்தல் நிகழ்வு தமிழர்களின் உரிமை, தமிழக அரசே நசுக்காதே! நினைவேந்தல் செய்தவர்கள் குண்டர்களா?” போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை சென்னை மெரினா கடற்கரையில் அனுஷ்டித்தமைக்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் தலைவர் உள்ளிட்ட நான்கு பேர் தமிழகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
June 08, 2017
Rating:

No comments:
Post a Comment