அஸ்தமனமாகப்போகும் டெனிஸின் அரசியல் ! பதவிக்காக தன்னை காப்பாற்ற கட்சித்தாவல்? விளக்கம் கோரும் ரெலோ தலைமை
வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தமிழரசுக் கட்சிக்கு தாவியுள்ளதாக தெரியவருகிறது.?
2013 ஆம் ஆண்டு வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ரெலோ அமைப்பின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு டெனீஸ்வரன் வெற்றி பெற்றிருந்தார்.
கட்சி ரீதியாக அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்ட போது ரெலோ சார்ப்பில் அவருக்கு மீன்பிடி அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது. அக்கட்சியுடனேயே இதுவரை இணைந்து செயற்பட்டும் வந்திருந்தார்.

இந்நிலையில் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் சாட்சியங்கள் சமூகமளிக்காமையால் அவரது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.
இந்நிலையில் வடமாகாண முதலமைச்சர் விசாரணை குழு ஒன்றை ஏற்படுத்தி விசாரணைகளை மீள மேற்கொள்ளப் போவதாகவும், அமைச்சரை ஒரு மாத விடுமுறையில் இருக்குமாறும் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக கையொப்பமிட்டிருந்தார்.
இன்று தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டுக்கு எதிராக ரெலோ அமைப்பு தீர்மானம் நிறைவேற்றி தமது உறுப்பினர்களை அக் கூட்டத்திற்கு அழைத்திருந்தது.
ஆனால் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் அதில் கலந்து கொள்ளாது தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இது குறித்து ரெலோ அமைப்பின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறிகாந்தா அவர்களிடம் கேட்ட போது, டெனீஸ்வரன் எமது கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
அவர் முதலமைச்சருக்கு எதிராக கையொப்பம் இட்டமை தொடர்பில் விளக்கம் கோரியுள்ளோம். அது கிடைத்ததும் எமது கட்சியின் மத்திய செயற்குழு இது குறித்து முடிவு எடுக்கும் எனத் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
June 16, 2017
Rating:

No comments:
Post a Comment