முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப் பெறுவதற்கு இணங்க மாட்டோம் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட கிளையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் அலைபேசியில் இன்று மதியம் பேசினார். இதன்போது, அமைச்சர்கள் இருவரையும் விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற முதலமைச்சரின் நிபந்தனையை நீக்குமாறு, இரா.சம்பந்தன் கோரியுள்ளார் என்று தெரிய வருகின்றது.
இதற்கு முதலமைச்சர், அவர்கள் விசாரணையில் தலையிடமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைப் பெற்றுத் தருமாறு கோரியுள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசாவுடன் பேசிய பின்னர், மீண்டும் தொடர்பு கொள்வதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை முதலமைச்சரும், மாகாண சபை உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப் பெறுவதற்கு இணங்க மாட்டோம் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட கிளையினர் குறிப்பிட்டுள்ளனர்.
முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப் பெறுவதற்கு இணங்க மாட்டோம் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட கிளையினர் குறிப்பிட்டுள்ளனர்.
Reviewed by NEWMANNAR
on
June 16, 2017
Rating:

No comments:
Post a Comment