நியூ மன்னாரின் ஊழல் ஒழிப்பு தேடலில் சிக்கியது டெனீஸ்வரனின் பத்து இலட்சம்
2014ம் ஆண்டு தென் இலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைச்சர் டெனிஸ்வரனின் அமைச்சினால் ரூபா.பத்து இலட்சம் ஒதுக்கப்பட்டது.
இவ் பத்து இலட்சம் ரூபா காசோலை மன்னாரில் பிரபல வர்த்தகர் ஒருவரிடம் கொடுக்கப்பட்டு சுமார் ரூபா.75,000 பெறுமதியான பொருட்களே கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
மீதி பணம் பல மாதங்களாக வர்த்தகரிடமே இருந்துள்ளது.பின்னர் மீதி பணம் அமைச்சரினால் பெறப்பட்டுள்ளது.
மீதி பணம் பல மாதங்களாக வர்த்தகரிடமே இருந்துள்ளது.பின்னர் மீதி பணம் அமைச்சரினால் பெறப்பட்டுள்ளது.
இவ் விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட வட மாகாண சபை உறுப்பினர்களும் அறிந்துள்ளார்கள் என நியூ மன்னார் இணையத்துக்கு தெரிய வருகிறது.
அமைச்சரினால் திரும்ப பெறப்பட்ட சுமார் ரூபா.925000 எங்கே போனது?
இந்த விடயத்தை முதலமைச்சரின் விசாரணை குழு கவனத்தில் எடுத்ததா?உடனடியாக கவனத்தில் எடுக்கப்பட்டு இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என நியூ மன்னார் கேட்டுக்கொள்கின்றது .
தொடர்புடையவை
நியூ மன்னாரின் ஊழல் ஒழிப்பு தேடலில் சிக்கியது டெனீஸ்வரனின் பத்து இலட்சம்
Reviewed by NEWMANNAR
on
June 19, 2017
Rating:

No comments:
Post a Comment