Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

அமைச்சர் டெனிஸ்வரனிடம் நியூ மன்னார் இணையத்தின் கேள்விகள்

வணக்கம்! 
அமைச்சர் டெனிஸ்வரன் அவர்களே!

மறப்பது மக்களின் இயல்பு அதை மீள ஞாபக படுத்திகொண்டு இருப்பது ஊடகத்தின் கடமை இது மக்களுக்கு மட்டும் அல்ல உங்களை போன்ற அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும். 

கேள்விகளுக்கு முன் சில விடயங்களை உங்களுக்கு நினைவுபடுத்த இருக்கின்றேன்.வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றியை பெற்று ஆட்சி பீடம் ஏறியது முதல் மக்கள் தமிழ் அரசு அமைக்கப்பட்டு விட்டது என சந்தோசப்பட்டார்கள்.ஆனால் ஆளும் கட்சிக்குள் எதிர் கட்சியாக செயற்பட்டு வடமாகாண சபை மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை  போய்விட்டது இன்று .

 வடமாகாண  அமைச்சர் தெரிவு நடைபெறும் போது பங்காளி கட்சிகளுக்கு ஒரு அமைச்சர் என்ற முறையில் அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.அதில் டெலோவுக்கும்  ஒரு அமைச்சர்.ஆனால் டெலோ வின் அரசியல் தலைமை பீடம் அப் பதவிக்கு சிவாஜிலிங்கத்தையே தெரிவு செய்திருந்தது.ஆனால் இதற்கு திரு.செல்வம் அடைக்கலநாதன் உடன் படவில்லை.தான் பிரதிநிதித்துவபடுத்தும் வன்னி மக்களுக்கு குறிப்பாக மன்னாரை சேர்ந்த ஒருவர் தான் அமைச்சராக வர வேண்டும் என கூறி தன்னுடைய தலைவர் பதவியை கூட இராஜினாமா செய்ய முற்பட்டார்.இதனால் டெலோ அரசியல் பீடம் அவரது கோரிக்கைக்கு உடன் பட்டது.

இதன் பின் மன்னாரில் யாரை தெரிவு செய்வது என்பதில் குழப்பம்,,,,
முதன்மை வேற்பாளராக போட்டியிட்ட வைத்திய கலாநிதி குணசீலனையா அல்லது டெலோ வுக்குள் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற உங்களையா(டெனிஸ்வரன்) என்ற குழப்பம்.

ஆனாலும் பலரின் கோரிக்கைக்கு அமைய உங்களையே அமைச்சர் ஆக்கினார் செல்வம் அடைக்கல நாதன்.இது நீங்கள் அமைச்சரான வரலாறு.  இப்படி அமைச்சர் ஆனா நீங்கள் அந்த கட்சிக்கு காட்டும் விசுவாசத்தை எப்படி சொல்வது? பிச்சைபோல் அமைச்சு தூக்கி எறிகிறேன் என்றீர்களே அதட்கு.

நாங்கள் உங்களிடம் கேட்க வருவது

1.விசாரணை குழுவினால் குற்றம் சாட்டப்பட்ட 4 குற்றங்களும் எவை என கூறமுடியுமா?

2.உங்களை முதல்வர் விசாரணை முடியும் வரை 1 மாத காலம் ஓய்வில் இருக்க சொன்னார்.நீங்கள் குற்றமற்றவர் என்றால் ஒரு மாதம் ஒதுங்கி இருந்து விசாரணையை எதிர் கொள்வதில் என்ன தயக்கம்?.உங்கள் மீது நம்பிக்கை வைத்த எம்மை போன்றவர்களுக்கு நிரூபித்து இருக்க வேண்டும் நீங்கள் ஊழல் வாதி இல்லை என.3.விடுமுறையில் செல்ல மறுப்பது உங்களுக்கு எதிராக உள்ள சாட் சிகளை அளிக்கவா? 

4.விசாரணை ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை பிழையான கோணங்களில் சென்றுள்ளது என முதல்வர் மீது குற்றம் சாட்டும் நீங்கள் இதனை முன் கூட்டியே ஊடகங்களுக்கு தெரிவிக்காதது ஏன்?

5.நான்கு கட்சிகள் சேர்ந்து  நியமித்த முதலமைச்சரை தமிழரசுகட்சி நீக்குவதற்கு  அவசரமாக அன்று இரவே, உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்த கட்சியிடம் கலந்தாலோசிக்காமல்  நம்பிக்கை இல்லா பிரேரணையில் கையெழுத்திட்டு ஆளுனரிடம் கொடுத்தது  அதுவே தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா?6.முதல்வரை மாற்றுவதால் உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுக்கள் மறைந்து விடுமா?

6.முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆட்கள் பேரம் பேசுவதாக சொல்லும் நீங்கள் அதே போல் மில்லியன் கணக்கான ரூபாய்களை தந்து செயல்பட அழைத்த மத்திய அரசுடன் சேர்ந்து இயங்கும் அந்த  கட்சியின் பெயரை  அல்லது நபரை பொது வெளியில் வெளியிட தயாரா?7.அமைச்சரின் நிதி மோசடி எவ்வளவு என கேட்கிறீர்கள்.மோசடி என்பது நிதியில் மட்டும்தானா அதிகார துஸ்பிரயோகத்தில் இல்லையா?

8. தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாக சுயநலத்துடன் செயற்பட முற்படும் நீங்கள் அதாவது உங்கள் செல்வாக்கால் மில்லியன் கணக்கான ரூபாய்களை தந்து செயல்பட அழைக்கிறார்கள் என்கிறீர்கள் ,, அடுத்த தேர்தலில் சுயேச்சையாக நின்று வென்று காட்ட தயாரா? 


முதலமைச்சரை நீக்க அனுமதிக்க மாட்டோம் என டெலோ அறிவித்தும் நீங்கள் தமிழரசு கட்சி,சிறி லங்கா சுதந்திரகட்சி,மற்றும் றிசாட் பதியுதீன் கட்சியுடனும் சேர்ந்து தமிழ் மக்களால் அதிகூடிய வாக்கில் தெரிவு செய்யப்பட்ட முதல்வரைவிலக்க நினைத்தது மாபெரும் துரோகம்.  முதல்வரை தெரிவு செய்தது  தமிழ் தேசிய கூட்டமைப்பே.
சிறி லங்கா சுதந்திரகட்சியோ ,மற்றும் றிசாட் பதியுதீன் கட்சியோ அல்ல. 

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக  வாக்கு அளித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே,  நீங்கள் ஒரு அபிவிருத்திக்காக ஒரு பெரும்பான்மை கட்சியுடன் சேர்ந்து செயற்படுவது வேறு ஆனால் சொந்த கட்சிக்குள் இருக்கும் முதல்வரை எதிர் கட்சியுடன் சேந்து நீக்க முற்படுவது உங்கள் பதவி ஆசை,மற்றும் பதவியை தக்க வைப்பதற்கான எண்ணமே. அதுவே  உங்கள் மேல் எமக்கு சந்தேகத்தை தோற்றிவித்துள்ளது ,விலக்கப்பட்ட திரு ஐங்கரநேசன் கூட முதல்வருக்கு எதிராக செயல்படவில்லை  ஆனால் நீங்கள் முதல்வருக்கு எதிராக  எடுத்த முடிவே எங்களை கேள்வி கேட்க தூண்டியது 

நியூ மன்னார் 
அமைச்சர் டெனிஸ்வரனிடம் நியூ மன்னார் இணையத்தின் கேள்விகள் Reviewed by நியூ மன்னார் on June 17, 2017 Rating: 5
Post a Comment
Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.