ரஷ்யா குறித்த குற்றச்சாட்டுகளை அறிந்தும் மெத்தனமாக இருந்தார் ஒபாமா: டிரம்ப் விளாசல்....
2016ல் நடந்த அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையீடு குறித்த குற்றச்சாட்டுகளை நன்கு அறிந்தும் ஒபாமா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என டிரம்ப் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா ஜனாதிபதி புடின் நேரடியாக ஈடுபட்டதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதை புடின் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இந்நிலையில், உலக புகழ்பெற்ற வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை சமீபத்தில் வெளியிட்ட கட்டுரையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே அப்போதைய ஜனாதிபதி ஒபாமாவுக்கு ரஷ்யா தலையீடு இருந்ததாக கூறப்படுவது குறித்து தெரியும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி தேர்தலை குலைத்து ஹிலாரியை தாக்கி, டிரம்பின் வெற்றிக்கு உதவ புடின் இணைய பிரசாரத்தில் ஈடுப்பட்டதாக ரஷ்ய அரசை சார்ந்த வட்டாரங்கள் ஒபாமாவிடம் அப்போதே தெரிவித்ததாக கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து நன்கு அறிந்த ஒபாமா, அது குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், ஒபாமா இந்த விடயத்தில் மெத்தனமாக இருந்ததாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்யா குறித்த குற்றச்சாட்டுகளை அறிந்தும் மெத்தனமாக இருந்தார் ஒபாமா: டிரம்ப் விளாசல்....
Reviewed by Author
on
June 25, 2017
Rating:

No comments:
Post a Comment