இந்தியாவை துவம்சம் செய்த இலங்கை..கடைசியில் மிரட்டிய மேத்யூஸ்: அபார வெற்றி
சாம்பியன் டிராபி தொடரில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவான், ரோகித் சர்மா, டோனி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 321 ஓட்டங்கள் குவித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 8-வது ஆட்டம் லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. முக்கியமான இந்த லீக் ஆட்டத்தில், குரூப் பி பிரிவில் உள்ள இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் பந்துவீச்சை தெரிவு செய்தார்.
இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 321 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ஓட்டங்கள் எடுத்தது.
சிறப்பாக விளையாடி 78 குவித்து ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அணித்தலைவர் கோஹ்லி டக் அவுட் ஆனார். யுவராஜ் 7 ஓட்டங்களில் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.
பின்னர், ஷிகார் தவானுடன், டோனி ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஷிகார் தவான் சதம் விளாசினார். 128 பந்துகளில் 125 ஓட்டங்கள் எடுத்த போது ஷிகர் தவான் ஆட்டமிழந்தார்.
வந்த வேகத்தில் சிக்ஸர் விளாசிய பாண்டியா 5 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டோனி 46 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருப்பினும், 52 பந்துகளில் 63 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டோனி ஆட்டமிழந்தார்.
கடைசியில் ஜாதவ் 13 பந்துகளில் 25 ஓட்டங்கள் அடிக்க இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 50 ஓவர்கள் முடிவில் 321 ஓட்டங்கள் குவித்தது.
இதைத் தொடர்ந்து கடினமான இலக்கை துரத்துவதற்கு இலங்கை அணி சார்பில் துவக்க வீரராக டிக்வெல்லா மற்றும் குணதிலகா களமிறங்கினர்.
துவக்க வீரரான டிக்க்வெல்லா 7-ஓட்டங்களில் புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் ஆட்டமிழந்து இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் துவக்க வீரர்,குணதிலாகவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
இதனால் அணியின் எண்ணிக்கை சீரான இடைவெளியில் எகிறியது. இந்த இணை ஜோடி 150 ஓட்டங்களுக்கு மேல் ஆடி வந்தது. அணியின் எண்ணிக்கை 170- ஓட்டங்களை எட்டிய போது குணதிலகா 76-ஓட்டங்களில் எதிர்பாரதவிதமாக ரன் அவுட் ஆனார்.
அடுத்து வந்த குசல் பெரரா, குசால் மெண்டிஸ்சுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். குசால் மெண்டிஸ் 89-ஓட்டங்களை எட்டிய போது புவனேஸ்வர் குமாரின் துல்லியமான துரோவால் ரன் அவுட்டனார்.
இலங்கை அணி ஒரு கட்டத்தில் 32.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்கள் எடுத்து வலுவான நிலையில் ஆடிக்கொண்டிருந்தது.
அப்போது சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த குசால் பெரரா 47 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார்.
அடுத்து வந்த அணியின் தலைவர் மேத்யூசும், குணரத்னேவும் இணைந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
இவர்கள் இருவரும் ஆட்டத்தின் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் விளாசினர். இருவரின் அதிரடியால் அணியின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் எகிறியது.
கடைசி நான்கு ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு 21 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இருந்த போதும் மேத்யூஸ் மற்றும் குணரத்னே எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் இந்திய அணியின் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டனர்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இலங்கை அணியின் தலைவர் மேத்யூஸ் கடைசி கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மேத்யூசின் அதிரடியால் இலங்கை அணிக்கு கடைசி இரண்டு ஓவரில் 8 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரை யாதவ் வீசினார்.
இந்த ஓவரின் முதல் பந்தில் 2-ஓட்டமும், அடுத்த பந்தில் 1-ஓட்டமும், அதற்கு அடுத்த பந்தில் 4-ஓட்டமும், நான்காவது பந்தில் 1-ஓட்டமும் எடுத்து இலங்கை அணி இறுதியாக 48.4 ஓவரில் 3-விக்கெட் இழப்பிற்கு 322 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியாவை துவம்சம் செய்த இலங்கை..கடைசியில் மிரட்டிய மேத்யூஸ்: அபார வெற்றி
Reviewed by Author
on
June 09, 2017
Rating:

No comments:
Post a Comment