அதிகாரம் வழங்கப்படாமை அதிருப்தியை ஏற்படுத்துகிறது....
மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படாமையினால் மத்திய அரசாங்கத்துடன் தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பு கொண்டு உருவாக்கப்படாத நிலையில் பழைய நிலைமையிலேயே மாகாண சபைகள் செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவை தவிர்க்கப்பட வேண்டும் எனவும் முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 17 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் நேற்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து, சமகால விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்கள்.
இதன்போது இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகள் எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரம் வழங்கப்படாமை அதிருப்தியை ஏற்படுத்துகிறது....
Reviewed by Author
on
June 09, 2017
Rating:

No comments:
Post a Comment