ஒரு மாத மழை ஒருநாளில் பொழியும்: வெள்ள அபாய எச்சரிக்கை...
பிரித்தானியாவில் ஒரு மாதத்துக்கு பொழிய வேண்டிய மழை அடுத்த 24 மணிநேரத்தில் பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியாவின் எல்லா பகுதிகளிலும் அதிகளவு மழை பொழிந்து வெள்ளம் ஏற்படலாம் என வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் ஒரு மணிநேரத்துக்கு 50 மீட்டர் என்ற அளவில் பலத்த சூறாவளி காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரித்தானியாவின் வானிலை மைய அதிகாரி Steve Keates கூறுகையில், இந்த வாரத்தில் பிரித்தானியாவில் உள்ள எந்தவொரு பகுதியும் வெள்ளத்திலிருந்து தப்ப முடியாது.
மேற்கு பகுதியில் மழை மற்றும் வெள்ளத்தின் தாக்கம் இருக்கும்.
அதிலும் வடமேற்கு பிரித்தானியா, வேல்ஸ், மேற்கு மிட்லாண்ட்ஸ் மற்றும் ஹம்பேர் பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களை விட வரவிருக்கும் நாட்கள் குளிர்ச்சியாகவும், ஈரப்பதத்தோடும் இருக்கும்.
இந்த வாரத்தின் மிக குளிர்ச்சியான நாளாக நாளைய தினம் இருக்கும் என கூறியுள்ளார்.
கடந்த வாரம் பிரித்தானியாவில் வெப்பம் வாட்டியெடுத்ததையொட்டி மக்கள் அதிலிருந்து தப்பிக்க கடற்கரையை அதிகம் நாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மாத மழை ஒருநாளில் பொழியும்: வெள்ள அபாய எச்சரிக்கை...
Reviewed by Author
on
June 06, 2017
Rating:

No comments:
Post a Comment