அமெரிக்காவை முந்திய நைஜீரியா! சீனாவை முந்தப்போகும் இந்தியா: எதில் தெரியுமா?
தற்போது 7.6 பில்லியனாக இருக்கும் உலக மக்கள் தொகையானது 2030 ஆம் ஆண்டில் 8.6 பில்லியனாகவும், 2050 ஆம் ஆண்டில் 9.8 பில்லியனாகவும், 2100 ஆம் ஆண்டில் 11.2 பில்லியனாகவும் உயரும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 83 மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள் தொகையில் சேர்க்கப்படுவதால், மக்கள்தொகை அளவு அதிகரிப்பு தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்களில் ஐ.நா. சபை வெளியிட்டுள்ள 2017க்கான திருத்தங்கள், எதிர்காலத்திற்கான உலகளாவிய மக்கள்தொகை போக்குகள் மற்றும் எதிர்காலங்களின் விரிவான ஆய்வுகளை வழங்குகிறது.
புதிய நிலை வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு நோக்கமாகக் கொண்ட கொள்கைகளை வழிகாட்டுவதற்கு இந்த தகவல்கள் அவசியம் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
சீனா (1.4 பில்லியன் மக்களுடன்) மற்றும் இந்தியா (1.3 பில்லியன் மக்களுடனும்), உலகின் மொத்த மக்கள் தொகையில் 19% மற்றும் 18% மக்களை முறையே கொண்டுள்ளது.
ஏறக்குறைய ஏழு ஆண்டுகளில் அல்லது 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை விட அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் கணக்கிடுகையில் மக்கள் தொகையை கொண்டு கணக்கிடப்பட்ட பெரிய நாடுகளின் வரிசையில் நைஜீரியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
இதன் விளைவாக, தற்போது நைஜீரியாவின் மக்கள்தொகை 7 வது இடத்தில் உள்ளது, இது அமெரிக்காவை விட அதிகமாகும்.
இதனால் 2050 ஆம் ஆண்டுக்கு முன்னர் உலகின் மூன்றாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக நைஜீரியா மாறிவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவை முந்திய நைஜீரியா! சீனாவை முந்தப்போகும் இந்தியா: எதில் தெரியுமா?
Reviewed by Author
on
June 23, 2017
Rating:

No comments:
Post a Comment