அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவில் சாதனை படைத்த தமிழ் மாணவன்!


அமெரிக்காவில் கல்வி கற்று வரும் தமிழ் மணவனான நிருபன் பகிதரன் அதிக புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

Technology High School, Newark ல் உயர்தரக் கல்வியைக் கற்று அதிகூடிய புள்ளிகளைப் பெற்று, முதல் நிலை மாணவனாக தன்னை பதிவு செய்துள்ளார்.

இதன் காரணமாக பல்கலைக்கழகத்தில் மருத்துவ, பொறியியல் துறைகளில் கல்வி கற்கத் தகைமை பெற்றுள்ளார். Rutgers University புலமைப்பரிசில் வழங்கி, கல்வியைத் தொடர வாய்ப்பளித்துள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பகிதரன் குருநாதபிள்ளை - கமலேஸ்வரி பகிதரன் ஆகியோரின் புதல்வரான நிருபன் ஜேர்மனியை பிறப்பிடமாக கொண்டுள்ளார். தற்போது அமெரிக்காவின் Newark, New Jerseyல் வசித்து வருகிறார்.

நிருபன் தனது பாடசாலையில் National Honor Society President ஆகவும், தனது வகுப்பு மாணவ தலைவனாகவும் இருந்து வந்துள்ளார்.

பாடசாலையில் நடைபெறும் இயல், இசை, நாடக நிகழ்வுகளில் பங்குபற்றி வந்ததுடன், மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தார்.

இவருக்கு Valedictorian Award, National Honor Society President Award, Leadership Award போன்றவற்றை பாடசாலை வழங்கி கௌரவித்துள்ளதுடன், Essex County Scholastic Award னை Essex County, New Jersey யும், Superintendent Award னை The State of New Jersey Senator M. Teresa Ruiz அவர்களும் வழங்கி கௌரவித்துள்ளனர்.

தனது 7 வயதில் கட்டுரைப் போட்டியில் முதல் இடத்தினைப் பெற்றுக் கொண்டமைக்காக , Newark Major Sharp James அவர்கள் சிறப்புப் பரிசில் வழங்கி கௌரவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஆங்கிலம், ஸ்பானிஸ் மொழிகளில் திறமை பெற்ற நிருபன், தமிழ் மொழியையும் கற்று வருவதுடன், எமது கலை, கலாச்சார நிகழ்வுகளிலும் பங்குபற்றி தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.

கடந்த வருடம், இலங்கைத் தமிழ்ச் சங்கம், அமெரிக்கா நடாத்திய கட்டுரைப் போட்டியில் நிருபன் இரண்டாம் இடத்தினைப் பெற்றமைக்காக முன்னாள் ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையாளரும், நீதிபதியுமான மதிப்பிற்குரிய நவநீதம்பிள்ளை அவர்கள் வெற்றிக்கிண்ணத்தை வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் சாதனை படைத்த தமிழ் மாணவன்! Reviewed by Author on June 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.