கணனி திருத்தகம் எரிந்து நாசம்!
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள கணனி திருத்தும் நிலையத்தில் நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் பல இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் நாசமடைந்துள்ளன. இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
குறித்த கணினி திருத்தத்தில் பிரிண்டர் திருத்திக் கொண்டிருந்த வேளை பிரிண்டர் வயரில் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாக பிரிண்டர் வயர் திடீரென தீப்பற்றியுள்ளது. தீ பற்றிய வயரை அங்கு பணிபுரிந்த ஒருவர் நிலத்தில் தூக்கி எறிந்த சமயத்தில் துரதிஷ்டவசமாக நிலத்தில் இருந்த காபற்றில் பற்றிய தீ கடை முழுவதும் பரவி கடையிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமடைந்துள்ளன.
உடனடியாக நகர சபையின் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ மேலும் எரியாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ் தீ விபத்தினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படாத நிலையில் சுமார் இருபது இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து சாம்பளாகியுள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
கணனி திருத்தகம் எரிந்து நாசம்!
Reviewed by Author
on
June 07, 2017
Rating:

No comments:
Post a Comment