மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகள் காரணம் என்ன….???
மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகள் காரணம் என்ன….???....வை.கஜேந்திரன்-
இந்த பரந்துவிரிந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகள் அனைவருக்கும் பிறப்போடு தொடங்குகின்ற வாழ்வானது இறக்கும் வரையான காலப்பகுதியாகும் மகத்துவமான அதிலும் குறிப்பாக மனிதகுலத்தின் ஆரம்பமே ஆணும் பெண்ணும் சேர்ந்து அன்பால் உருவாக்குகின்ற உலக வாழ்க்ககையின் தொடக்கமும் முடிவும் அடங்கியுள்ளது இந்த பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் தான்.
அந்த அழகிய வாழ்க்கையை வாழமுடியாமல் பலர் எடுக்கும் முடிவுகள் தான் ஏராளம் அதில் முதன்மையானது இந்த தற்கொலைதான் தற்போது உலகில் சதாரண விடையம் ஆம் தற்கொலை பற்றிய ஒரு கண்ணோட்டத்தினைத்தான் இங்கு காணப்போகின்றோம்.
தற்கொலை என்றால் என்ன என்றகேள்வியானது ஆங்கிலத்தில் சூசைட்-SUICIDE ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்ற தாங்கிக்கொள்ளமுடியாத இயற்கையனர்த்தங்கள் சமூகக்காரணிகள் சூழலியல் பிரச்சினைகள் இவையனைத்தாலும் ஏற்படுகின்ற மனஅழுத்தம் உளநெருக்கீட்டின் விளைவாக தாங்கிக்கொள்ளமுடியாமல் ஏற்றுக்கொள்ளமுடியாமல் வாழ்க்கையை வெறுத்து எடுக்கும் முடிவே தற்கொலை. உயிர்குடிக்கும் எமனின் தூதுவன் இந்த தற்கொலை…..
மிகையான மனச்சோர்வு மதுப்பழக்கத்திற்கு ஆழாவதாலும் எல்லாவற்றினையும் இழந்த நிலையில் நம்பிக்கையற்ற உணர்வு மேலோங்கும் போது சமூகம் மற்றும் சூழலியல் குடும்பம் நண்பர்கள் உறவினர்கள் இவர்களின் இருந்து ஆதரவு அற்ற நிலையில் இருக்கும் போது இவ்வாறான தவறான முடிவுக்கு தள்ளப்படுகின்றார்கள் இது தற்கொலை முயற்சியின் பின் அது பலரின் தற்கொலைக்கு முன்மாதிரியாக இருக்கின்றது.
தற்கொலையினை மேற்கொள்ளும் வழிகள்----
அது போல மீன்பிடி எனும் போது இந்திய மீனவர்களின் ரோலர் வருகையாலும் தென்னிலங்கை மீனவர்களின் வருகையாலும் வழித்து அள்ளப்படும் மீன்குஞ்சுகள் இனப்பெருக்கம் இல்லாமையினால் மீன்பிடியும் பாதிப்படைந்துள்ளது.
இவ்வாறிருக்க ஏனைய தொழில்துறைகளில் வியாபாரமின்மை இதனால் வருகின்ற வேலையிழப்பு வருவாய் இழப்பு குடும்பங்களின் செலவீனங்களை சமாளிக்க திணறும் மக்கள் பெற்றுக்கொள்ளும் கடன்கொடுப்பனவுகள் வட்டிப்பணம் மீளச்செலுத்த முடியமலும் இன்னும் சொல்ல முடியாத பல துன்பமான அத்தனை விடையங்களுக்கும் ஒரே தீர்வு தான் இந்த தற்கொலை….
மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையில்லாப்பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்றால் வெறுமனே 06மாதம் 01வருடம் என்று வழங்கும் பயிற்சி வகுப்புக்களால் எந்தப்பலனும் இல்லை ஒரு பயிற்சியை நிறைவு செய்தால் உடனே வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.
அப்படியான வேலைத்திட்டத்தினை உருவாக்கல் வேண்டும்.
ஒரு தீப்பொறி எவ்வாறு பெரிய தீச்சுவலையாக எரிகின்றதோ அதேபோல் மாணவர்கள் மாணவிகள் இளைஞர்யுவதிகள் மட்டில் நல்லெண்ணங்களையும் நம்பிக்கையினையும் விடாமுயற்சி பயிற்சி போன்றவற்றினை வழக்கப்படுத்தி பழக்கமாக்கிகொள்ள ஆசிரியர்கள் பெற்றோர்கள் பெரியோர்கள் மக்கள் என்ற ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்.
வாழ்வில் ஏற்படுகின்ற துன்பங்களை தாங்கி வெற்றிபெறதேவையான நதம்பிக்கையினை வழங்கும் விதமாக கூட்டாக இணைந்து செயலாற்றும் தன்மையை வளர்த்து கொள்ளவேண்டும்.
இன்றைய இளம்தலைமுறை சமூதாயத்தினை நல்லவழியில் வழி நடத்தினால் நாளைய உலகம் நல்ல தலைமுறையைக்கொண்டிருக்கும் நமது கலாச்சாரமும் பாரம்பரியமும் காக்கப்படும் போற்றப்படும்.
தற்கொலை எண்ணம் தோண்றுவதற்கான பிரதான காரணங்கள்----
பொன்னான வாழ்வை மண்ணாக்கலாமா....
மனிதா மனதில் குழப்பமா....... கலக்கமா......
மறுபடி இவ்வாழ்வு கிடைக்குமா-உன்
மகத்தான வரலாறு நிலைக்குமே...நீ நம்பிக்கையில்......
தற்கொலை எண்ணங்கொண்டவர்களை இணங்காணுதல் பெரும்பாலனவர்கள் தங்களின் தற்கொலை எண்ணத்தினை தமக்கு நெருங்கியவர்களிடம் கூறிக்கொள்ளவே செய்கின்றார்கள் அந்த தருணங்களில் நாம் பாராமுகமாய் இராமல் தடுத்தல் அவசியம் ஆகும். பெரும்பாலும் வயதுவந்தவர்களும் கட்டிளமைப்பருவத்தினரும் தற்கொலைக்கு ஈடுபடுவது வாய்ப்புக்கள் அதிகமாய் உள்ளது அதுபோலவே இளம்பராயத்தினர் உணர்ச்சி மேலீட்டினாலும் வயதுவந்தவர்கள் நன்கு திட்டமிட்டும் தற்கொலைகளை செய்கின்றனர்.
ஒருவர் தற்கொலை எண்ணத்தினை வெளிப்படுத்தும் போது நாம் அவதானமாக இருத்தல் வேண்டும் தற்கொலையினைத்தடுப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை திட்டங்களை கையாளவேண்டும். பெரும்பாலன ஆண்கள் தற்கால நிவாரணியாக மதுப்பழக்கத்திற்கு ஆளாகின்றார்கள் குடும்பத்தின் சூழலும் சமமின்மையும் சமத்துவமின்மையும் பதற்றம் நெருக்கீடுகள் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுதலை பெறுவதற்காக மதுவிற்கு அடிமையாகின்றார்கள்.
இந்த மதுப்பழக்கமானது உடல்உள உபாதைகளையும் நீண்டகால விளைவுகளையும் ஏற்படுத்துவதோடு மனோபலத்திலும் நடத்தைக்கோலங்களிலும் பெருமளவிலான மாற்றங்கள் ஏற்படுகின்றன அறிவியற் தொழிற்பாடுகளும் மாற்றமடையும் அதைவிட தற்கொலை எண்ணமும் விபத்து கொலை குடும்பஉறவில் சிக்கல் மற்றும் பாலியல் பிரச்சினைகள் என பலவிளைவுகள் மதுப்பாவனையால் விளைகின்றன.
மதுப்பாவனையானது முன்னையகாலத்தில் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக அருந்தப்பட்ட ஒன்று இன்று அதுவே மனிதசெயற்பாடுகள் அனைத்திலும் மதிப்பிற்குரியதாக அந்தஸ்தானவொரு அங்கீகரிக்கப்பட்டதொன்றாக மாறியுள்ளது இந்த மாற்றமானது சமூகமயமாக்கலின் விளைவாக மதுஉற்பத்தி விநியோக நிறுவனங்களின் விளம்பரமும் அதற்கான திட்டமிட்டுசெயல்படுவது கண்கூடு மதுப்பழக்கம் நவநாகரீக செயல்பாடு என்பது நகரமயமாக்கல் பூகோளமயமாக்கலின் ஒரு விளைவு என்பது நிதர்சனம்.
மதுப்பழக்கமானது எவ்வாறு ஒரு நபரின் உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை எல்லா உறுப்புக்களையும் பாதிக்கின்றதே அதுபோல அந்த நபரால் மருத்துவம் சுகாதாரம் பொரளாதாரம் சமூகம் குடும்பம் குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்படுவது இந்த பாழாய்ப்போன குடியால் தான் குடியின் பிரதான பரிணாம வளர்ச்சியாகும் மதுப்பழக்கத்தினால் மனச்சோர்வு தற்கொலை வன்முறைக்குற்றங்கள் போன்றவற்றின் பிறப்பிடமாக திகழ்கின்றது இந்த குடிப்பழக்கம் அத்தோடு வறுமையும் ஏழ்மையும் மதுவின் வாரிசுகள்.
மனச்சோர்வு- மனிதனுக்கு ஏற்படுகின்ற உளநெருக்கீடுகள் தாங்கமுடியாத துன்பங்கள் எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படுத்துகின்ற தாக்கம் மீண்டும் மீண்டும் ஏற்படுகின்ற எதிர்மறையான சிந்தனைகள் தான் மனச்சோர்வு காலப்பகுதியில் ஒரு நோயாக மாற்றம் பெறுகின்றது. உளநலக்குறைபாடு மனச்சோர்வு ஆகும். எண்ணங்கள் உணர்ச்சிகள் உடற்றொழில் கோலம் ஏற்படும் விளைவுகள் தான் மனச்சோர்வின் அடிப்படை காரணமாகும்.
கவலை-கவலைப்படுதல் என்பது அன்றாடம் ஏற்படும் ஓரு உணர்வு அதிலிருந்து நாம் சில நிமிடங்களில் விடுபடுகின்றோம் ஒரு துன்பமான நிகழ்வு காரணமாக கவலை ஏற்படுதல் ஒரு சாதாரண நிகழ்வாகும் ஆனால் கவலை என்ற உணர்ச்சி நீண்டு நிரந்தரமாக ஒருவரது வாழ்வில் ஒரு அங்கமாக மாறும்பொழுது அது மனச்சோர்வின் அறுகுறியாக அமைகின்றது.
தற்கொலை எண்ணம்-அடிக்கடி ஒருவர் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என எண்ணுவதும் அதிகநாள் திட்டமிடுவதும் ஒரு சாதாரணவிடையமல்ல அது அவருக்கு ஏற்படும் மனச்சோர்வின் பாதிப்பிற்குள் மூழ்கிருப்பதன் வெளிப்பாடாக அமைதல் கூடும் ஒருவர் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்துவதாயின் புறக்கணிக்ககூடிய விடையமல்ல அவ்வெளிப்பாட்டினை புரிந்துகொண்டு அதற்குரிய செயற்பாடுகளில் ஈடுபடுதல் அவசியமாகும் பெரும்பாலான தற்கொலை செய்துகொள்பவர்கள் தாம் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அவ்விடையத்தினை வெளிப்படுத்துகின்றார்கள் எனவே அதை நாம் அபாய அறிவிப்பாக எடுத்துக்கொள்ளவேண்டும். சிலவேளைகளில் அன்புக்குரியவர்களின் மற்றும் உறவினர்களின் மனதைக்காயப்படுத்தவும் அவர்களை உளவியில் ரீதியாக துன்புறுத்தவும் சிலர் தற்கொலை எண்ணத்தினை வெளிப்படுத்துவது உண்டு.
நம்பிக்கையின்மை-யார் அதிகம் நம்பிக்கையற்றவராக அதுவும் எதிர்கால வாழ்வில் நம்பிக்கையற்றவராக காணப்படுராயின் அதை ஒரு குறிப்பிடத்தக்க அலட்சியப்படுத்த முடியாத விடையமாகக்கொள்ளவேண்டும்
எமது வாழ்க்கைச்சக்கரம் சுழல்வதற்கு அடிப்படையானது நம்பிக்கையே ஆகும் அந்த அச்சாணியினை ஒருவர் தொலைப்பாராயின் அது அவரது வாழ்வினை முற்றாக தொலைப்பதற்கு ஒத்ததாக அமைகின்றது.
நம்பிக்கையின்மையும் தற்கொலையெண்ணமும் ஒருவரிடம் காணப்படுமாயின் நாம் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும்.
பெற்றோர்களின் மணமுறிவும் சண்டைசச்சரவும் குடும்பச்சு10ழலில்வளர்ந்தவர்களையும் மணமுறிவு செய்துகொள்ளும் பெற்றோர்களின் பிள்ளைகளiயும் குறிப்பிடலாம். உடல்ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டவர்களிடையேயும் மணமுறிவு அதிகமாக காணப்படுகின்றது.
சந்தோசங்களையும் துக்கங்களையும் துயரங்களையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய உறவுகள் நண்பர்கள் அற்றவர்களுக்கும் இப்படியான வீட்டுச்சூழலில் இருந்து வாழுகின்றவர்களின் மனதில் தான் தற்கொலை எண்ணம் உண்டாகின்றது.
மணச்சோர்வில் இருந்து வெளிப்படல் வேண்டும் என்றால்….
எதிர்மறை எண்ணங்களை நிராகரித்தல்
எதிர்மறை எண்ணங்கள் தொடர்ச்சிசயாக ஏற்பட்டு அவையே எமது வாழ்வின் அங்கமாகவும் ஒரு பழக்கமாகவும் மாறிவருவதால் அவை எமது துயரமனநிலையை தக்கவைத்து மனச்சோர்வினை ஏற்படுத்துகின்றன. இவற்றினை அடையாளம் கண்டு நிராகரிப்பதன் மூலம் யதார்த்தமான நேர் எண்ணங்களை எம்மில் ஏற்படுத்த வேண்டும் இதன் மூலம் சுயஇரக்கத்தினை தவிர்த்து தன்னம்பிக்கையினை ஏற்படுத்தி மனச்சோர்வில் இருந்து விடுபடவழியமைத்தல் வேண்டும்.
எதிர்மறை எண்ணங்களைக்கையாளுதல்.....
எமது எண்ணங்களே எமது மனோபலத்திற்கும் ஆழமான காரணமாக அமைகின்றன எண்ணங்கள் எமது மனவெளியினை நிறைத்து நிற்கும் பொழுது எமது முகபாவத்தினை பெருமளவில் நிர்ணயிக்கின்றன எதிர்மறை எண்ணங்களை அடிக்கடி ஏற்படுத்துவதே சகஜமே ஆனால் அவற்றில் ஊன்றிக்கவனம் எடுக்கும்போது அவையே வாழ்வின் முழுவதுமாகி எமது அகப்பார்வையினை மாற்றிவிடுகின்றன இதனால் உறவுகளுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டு எங்களை நாம் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு விடுவதால் தோனும் வழியில் போகின்றது.எனவே எதிர்மறை எண்ணங்களில் விடுபடுதல் என்பது. மிகமிகமுக்கியமானதொரு செயற்பாடாகும் ஆனால் மனச்சோர்வுக்கு உட்பட்ட ஒருவர் எதிர்மறையான எண்ணங்களையெல்லாம் தனது மனோபலத்திற்கு உட்பட்டது என்பதை உணரவேண்டும்.
ஒருவர் தான் பலவீனமானவர் என்றும் தன்னால் எதுவுமே செய்யமுடியாது என்றும் கையாலாகத தனத்துடன் திரும்பத்திரும்ப சிந்திப்பாராயின் அவரால் எதையும் செய்யமுடியாமல் போகும் சந்தர்ப்பங்கள் அதிகமாகும்.
கீழைத்தேய நாடுகளில் கலாச்சார சமய விழுமியங்கள் உடல் மன ஒருமைப்பாட்டினை மிகவும் வலியுறுத்துகின்றன.
"வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்" என்ற பாடலை கேட்டு இரசித்து இருக்கின்றோம் ஆனால் வாழ்கின்றோமா….? என்றால் இல்லை….
ஆனால் தற்போதைய நவீன யுகத்தில் மனிதனும் இயந்திரமாகிவிட்தால் மணிதமாண்பு பண்பு அன்பு இரக்கம் இவையனைத்தும் இழந்தவச்களாய் தனிமையிலும் தனிப்பட்டே வாழப்பழகிக்கொண்டு இருப்பதால் தான் தற்கொலைகள் அதிகமாகியுள்ளது.மெய்ஞானத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் இடையில் மனிதவர்க்கம் செய்யவேண்டியுள்ளது அஞ்ஞானவாசம்.
தற்கொலையினை தடுப்பதற்கு சிலஅணுகுமுறைகள் என்றால் ஒவ்வொருவருக்கும் இடையில் நல்லபுரிந்துணர்வு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ஆழமான நட்பும் நம்பிக்கையும் கூட்டாகஇணைந்து செயலாற்றும் திறன் சமத்துவமான பொதுநலச்சிந்தனை இவையனைத்தினையும் எமது இளையதலைமுறையினர் வாழ்வாககொண்டால் அந்த வாழ்வு இனிதே….
உன் சாதனைக்கு நீ போடும் எல்லை
நீ மேற்கொள்ளும் தற்கொலை
வாழ்வானது ஒரு முறை….
வாழ்த்தட்டுமே தலைமுறை…..
-இளம்கவிஞர்-வை.கஜேந்திரன்-

- தூக்கில் தொங்குதல்
- விஷம் அருந்துதல்
- தூக்கமாத்திரை அதிகமாய் உட்கொள்ளல்
- கிணற்றில் குதித்து இறத்தல்
- எரியூட்டிக்கொள்ளுதல்
- கழுத்தினை அறுத்துகொள்ளல்
- தற்போது ரெயினில் பாய்ந்து கொள்ளல்
- கருணைக்கொலை(முதியவர்கள் மற்றும் இயலாதவர்கள் சுயவிருப்பின் பேரில் பிறரால் செய்யப்படுவது சில நாடுகளில் அனுமதியும் உண்டு உ+ம்-சுவிஸ்அரசுடன் EXIT இணைந்து)
அது போல மீன்பிடி எனும் போது இந்திய மீனவர்களின் ரோலர் வருகையாலும் தென்னிலங்கை மீனவர்களின் வருகையாலும் வழித்து அள்ளப்படும் மீன்குஞ்சுகள் இனப்பெருக்கம் இல்லாமையினால் மீன்பிடியும் பாதிப்படைந்துள்ளது.
இவ்வாறிருக்க ஏனைய தொழில்துறைகளில் வியாபாரமின்மை இதனால் வருகின்ற வேலையிழப்பு வருவாய் இழப்பு குடும்பங்களின் செலவீனங்களை சமாளிக்க திணறும் மக்கள் பெற்றுக்கொள்ளும் கடன்கொடுப்பனவுகள் வட்டிப்பணம் மீளச்செலுத்த முடியமலும் இன்னும் சொல்ல முடியாத பல துன்பமான அத்தனை விடையங்களுக்கும் ஒரே தீர்வு தான் இந்த தற்கொலை….
மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையில்லாப்பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்றால் வெறுமனே 06மாதம் 01வருடம் என்று வழங்கும் பயிற்சி வகுப்புக்களால் எந்தப்பலனும் இல்லை ஒரு பயிற்சியை நிறைவு செய்தால் உடனே வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.
அப்படியான வேலைத்திட்டத்தினை உருவாக்கல் வேண்டும்.
- அத்தோடு இளைஞர் யுவதிகளுக்கான அவர்களின் தராதரத்திற்கு ஏற்ப என்ன வேலைகளை செய்யலாம் என்ன படித்தால் உடன் வேலைகிடைக்கும் என்ற வழிகாட்டல் விழிப்புனர்வு மையம் ஒன்று அமைக்கவேண்டும் இலவச ஆலோசனை வழங்கவேண்டும்.
- மனச்சோர்வு மனக்குழ்ப்பம் இருப்போர்களுக்கு மனவள ஆலோசனை மையம் ஒன்றை அமைத்து இலவசமான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்குதல் வேண்டும்.
கல்வியை இடை நிறுத்தும் மாணவமாணவிகளுக்கு அவர்களின் விருப்பம் அறிந்து புதிய தொழிலிற்கல்வியினை வழங்குவதற்கான வழிகளை கண்டறிதல் வேண்டும்.
உயர்தரம் மற்றும் பல்கலைக்கழகம் கிடைக்காத மாணவமாணவிகளுக்கு உயர்கல்வியினை பெறுவதற்கான வழிவகைகளை(மன்னாரில் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குதல்) எதிர்காலதிட்டம் கொண்டு கணித்தல் அவசியம்.- மன்னார் மாவட்டத்தில் பொழுதைக்கழிக்கும் அளவிற்கு ஒரு சிறப்பான இடம் இல்லை(திரையரங்கு-பூங்கா- சுற்றுலாத்தளங்கள்-நல்ல நூலகமோ கல்விக்கூடமோ -விளைட்டுடன் தொடர்புடையதோ இல்லை)
ஒரு தீப்பொறி எவ்வாறு பெரிய தீச்சுவலையாக எரிகின்றதோ அதேபோல் மாணவர்கள் மாணவிகள் இளைஞர்யுவதிகள் மட்டில் நல்லெண்ணங்களையும் நம்பிக்கையினையும் விடாமுயற்சி பயிற்சி போன்றவற்றினை வழக்கப்படுத்தி பழக்கமாக்கிகொள்ள ஆசிரியர்கள் பெற்றோர்கள் பெரியோர்கள் மக்கள் என்ற ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்.
வாழ்வில் ஏற்படுகின்ற துன்பங்களை தாங்கி வெற்றிபெறதேவையான நதம்பிக்கையினை வழங்கும் விதமாக கூட்டாக இணைந்து செயலாற்றும் தன்மையை வளர்த்து கொள்ளவேண்டும்.
இன்றைய இளம்தலைமுறை சமூதாயத்தினை நல்லவழியில் வழி நடத்தினால் நாளைய உலகம் நல்ல தலைமுறையைக்கொண்டிருக்கும் நமது கலாச்சாரமும் பாரம்பரியமும் காக்கப்படும் போற்றப்படும்.
தற்கொலை எண்ணம் தோண்றுவதற்கான பிரதான காரணங்கள்----
- மனச்சோர்வும் விரக்தியும்
- பாசமின்மையும் அதற்கான ஏக்கமும்
- வரவை மிஞ்சிய செலவும் வறுமையும் ஏழ்மையும்
- பரீட்சையில் தோல்வி
- மன்னாரில் ட்ரீயுசன் கட்டணங்கள் அதிகரித்துள்ளது 1மணித்தியாலத்துக்கு 200+400+500 பாடங்களுக்குக்ம் தரங்களுக்கும் ஏற்ப மாறுபடும்
- பெண்களுக்கான துஸ்பிரயோகங்களும் மனதைபுன்படுத்தும் கேலிகிண்டல் வார்த்தைகளும்.
- அழகும் பணத்தின் மீதுகொண்ட அதீத ஆசை(விலையுர்ந்த அழகுசாதனங்களினால் சீரழியும் பெண்கள்)
- காதலின் ஊடேவந்த காமமும் மோகமும்
- அதிகமான கட்டுப்பாடுகள் விதிமுறைகள்(ஆடைக்குறைப்பும் )
- கருத்தூண்ற முடியாமையும் சொந்தக்காலில் நிக்கமுடியாமையும்
- எதிர்காலத்தின் மீதான அவநம்பிக்கை
- துன்பகரமான எண்ணங்களை திரும்பத்திரும்ப மீட்டிப்பார்த்தல்
- தனிமையும் ஒதுங்கியிருத்தலும்
- சோம்பலும் மெதுவாக இயங்குதலும்
- இலவசமாய் எல்லாம் கிடைக்கவேண்டும் என்ற எண்ணம்
- படிப்பிற்கான தகுதியான வேலையின்மை
- ஏதிர்பார்ப்புக்களினால் ஏற்படும் ஏமாற்றம்
- அதிகமான கவலைகளும் ஈடுசெய்ய முடியாத இழப்புகளும்
- தொலைபேசி-மோட்டர்பைக் வேண்டித்தரவில்லைஅழகுக்கிறீம் வேண்டித்தரவில்லை தூங்கவிடவில்லை என்றும் தொடர்நாடகங்கள் பார்க்முடியவில்லை என்றும் தற்கொலைசெய்பவர்களும் உண்டு.
பொன்னான வாழ்வை மண்ணாக்கலாமா....
மனிதா மனதில் குழப்பமா....... கலக்கமா......
மறுபடி இவ்வாழ்வு கிடைக்குமா-உன்
மகத்தான வரலாறு நிலைக்குமே...நீ நம்பிக்கையில்......
தற்கொலை எண்ணங்கொண்டவர்களை இணங்காணுதல் பெரும்பாலனவர்கள் தங்களின் தற்கொலை எண்ணத்தினை தமக்கு நெருங்கியவர்களிடம் கூறிக்கொள்ளவே செய்கின்றார்கள் அந்த தருணங்களில் நாம் பாராமுகமாய் இராமல் தடுத்தல் அவசியம் ஆகும். பெரும்பாலும் வயதுவந்தவர்களும் கட்டிளமைப்பருவத்தினரும் தற்கொலைக்கு ஈடுபடுவது வாய்ப்புக்கள் அதிகமாய் உள்ளது அதுபோலவே இளம்பராயத்தினர் உணர்ச்சி மேலீட்டினாலும் வயதுவந்தவர்கள் நன்கு திட்டமிட்டும் தற்கொலைகளை செய்கின்றனர்.
ஒருவர் தற்கொலை எண்ணத்தினை வெளிப்படுத்தும் போது நாம் அவதானமாக இருத்தல் வேண்டும் தற்கொலையினைத்தடுப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை திட்டங்களை கையாளவேண்டும். பெரும்பாலன ஆண்கள் தற்கால நிவாரணியாக மதுப்பழக்கத்திற்கு ஆளாகின்றார்கள் குடும்பத்தின் சூழலும் சமமின்மையும் சமத்துவமின்மையும் பதற்றம் நெருக்கீடுகள் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுதலை பெறுவதற்காக மதுவிற்கு அடிமையாகின்றார்கள்.
இந்த மதுப்பழக்கமானது உடல்உள உபாதைகளையும் நீண்டகால விளைவுகளையும் ஏற்படுத்துவதோடு மனோபலத்திலும் நடத்தைக்கோலங்களிலும் பெருமளவிலான மாற்றங்கள் ஏற்படுகின்றன அறிவியற் தொழிற்பாடுகளும் மாற்றமடையும் அதைவிட தற்கொலை எண்ணமும் விபத்து கொலை குடும்பஉறவில் சிக்கல் மற்றும் பாலியல் பிரச்சினைகள் என பலவிளைவுகள் மதுப்பாவனையால் விளைகின்றன.
மதுப்பாவனையானது முன்னையகாலத்தில் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக அருந்தப்பட்ட ஒன்று இன்று அதுவே மனிதசெயற்பாடுகள் அனைத்திலும் மதிப்பிற்குரியதாக அந்தஸ்தானவொரு அங்கீகரிக்கப்பட்டதொன்றாக மாறியுள்ளது இந்த மாற்றமானது சமூகமயமாக்கலின் விளைவாக மதுஉற்பத்தி விநியோக நிறுவனங்களின் விளம்பரமும் அதற்கான திட்டமிட்டுசெயல்படுவது கண்கூடு மதுப்பழக்கம் நவநாகரீக செயல்பாடு என்பது நகரமயமாக்கல் பூகோளமயமாக்கலின் ஒரு விளைவு என்பது நிதர்சனம்.
மதுப்பழக்கமானது எவ்வாறு ஒரு நபரின் உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை எல்லா உறுப்புக்களையும் பாதிக்கின்றதே அதுபோல அந்த நபரால் மருத்துவம் சுகாதாரம் பொரளாதாரம் சமூகம் குடும்பம் குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்படுவது இந்த பாழாய்ப்போன குடியால் தான் குடியின் பிரதான பரிணாம வளர்ச்சியாகும் மதுப்பழக்கத்தினால் மனச்சோர்வு தற்கொலை வன்முறைக்குற்றங்கள் போன்றவற்றின் பிறப்பிடமாக திகழ்கின்றது இந்த குடிப்பழக்கம் அத்தோடு வறுமையும் ஏழ்மையும் மதுவின் வாரிசுகள்.
மனச்சோர்வு- மனிதனுக்கு ஏற்படுகின்ற உளநெருக்கீடுகள் தாங்கமுடியாத துன்பங்கள் எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படுத்துகின்ற தாக்கம் மீண்டும் மீண்டும் ஏற்படுகின்ற எதிர்மறையான சிந்தனைகள் தான் மனச்சோர்வு காலப்பகுதியில் ஒரு நோயாக மாற்றம் பெறுகின்றது. உளநலக்குறைபாடு மனச்சோர்வு ஆகும். எண்ணங்கள் உணர்ச்சிகள் உடற்றொழில் கோலம் ஏற்படும் விளைவுகள் தான் மனச்சோர்வின் அடிப்படை காரணமாகும்.
கவலை-கவலைப்படுதல் என்பது அன்றாடம் ஏற்படும் ஓரு உணர்வு அதிலிருந்து நாம் சில நிமிடங்களில் விடுபடுகின்றோம் ஒரு துன்பமான நிகழ்வு காரணமாக கவலை ஏற்படுதல் ஒரு சாதாரண நிகழ்வாகும் ஆனால் கவலை என்ற உணர்ச்சி நீண்டு நிரந்தரமாக ஒருவரது வாழ்வில் ஒரு அங்கமாக மாறும்பொழுது அது மனச்சோர்வின் அறுகுறியாக அமைகின்றது.
தற்கொலை எண்ணம்-அடிக்கடி ஒருவர் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என எண்ணுவதும் அதிகநாள் திட்டமிடுவதும் ஒரு சாதாரணவிடையமல்ல அது அவருக்கு ஏற்படும் மனச்சோர்வின் பாதிப்பிற்குள் மூழ்கிருப்பதன் வெளிப்பாடாக அமைதல் கூடும் ஒருவர் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்துவதாயின் புறக்கணிக்ககூடிய விடையமல்ல அவ்வெளிப்பாட்டினை புரிந்துகொண்டு அதற்குரிய செயற்பாடுகளில் ஈடுபடுதல் அவசியமாகும் பெரும்பாலான தற்கொலை செய்துகொள்பவர்கள் தாம் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அவ்விடையத்தினை வெளிப்படுத்துகின்றார்கள் எனவே அதை நாம் அபாய அறிவிப்பாக எடுத்துக்கொள்ளவேண்டும். சிலவேளைகளில் அன்புக்குரியவர்களின் மற்றும் உறவினர்களின் மனதைக்காயப்படுத்தவும் அவர்களை உளவியில் ரீதியாக துன்புறுத்தவும் சிலர் தற்கொலை எண்ணத்தினை வெளிப்படுத்துவது உண்டு.
நம்பிக்கையின்மை-யார் அதிகம் நம்பிக்கையற்றவராக அதுவும் எதிர்கால வாழ்வில் நம்பிக்கையற்றவராக காணப்படுராயின் அதை ஒரு குறிப்பிடத்தக்க அலட்சியப்படுத்த முடியாத விடையமாகக்கொள்ளவேண்டும்
எமது வாழ்க்கைச்சக்கரம் சுழல்வதற்கு அடிப்படையானது நம்பிக்கையே ஆகும் அந்த அச்சாணியினை ஒருவர் தொலைப்பாராயின் அது அவரது வாழ்வினை முற்றாக தொலைப்பதற்கு ஒத்ததாக அமைகின்றது.
நம்பிக்கையின்மையும் தற்கொலையெண்ணமும் ஒருவரிடம் காணப்படுமாயின் நாம் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும்.
பெற்றோர்களின் மணமுறிவும் சண்டைசச்சரவும் குடும்பச்சு10ழலில்வளர்ந்தவர்களையும் மணமுறிவு செய்துகொள்ளும் பெற்றோர்களின் பிள்ளைகளiயும் குறிப்பிடலாம். உடல்ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டவர்களிடையேயும் மணமுறிவு அதிகமாக காணப்படுகின்றது.
சந்தோசங்களையும் துக்கங்களையும் துயரங்களையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய உறவுகள் நண்பர்கள் அற்றவர்களுக்கும் இப்படியான வீட்டுச்சூழலில் இருந்து வாழுகின்றவர்களின் மனதில் தான் தற்கொலை எண்ணம் உண்டாகின்றது.
மணச்சோர்வில் இருந்து வெளிப்படல் வேண்டும் என்றால்….
- இசையினை ரசித்தல்
- நல்ல புத்தகங்களை வாசித்தல்
- நகைச்சுவையினை கேட்டலும் பார்தலும்
- நண்பர்களுடன் மனம்விட்டுப்பேசுதல்
- சிலருக்கு மருத்துவசிகிச்சை தேவைப்படலாம் சிலருக்கு உளவளஆலோசனை உளவளச்சிகிச்சை தேவைப்படலாம். மனச்சோர்வு தீவிரமாக இருப்பதால் பௌதீகச்சிகிச்சைகள் தேவைப்படுகின்றன மாத்திரைகள் மென்மின் அதிர்ச்சி சிகிச்சைமுறைகள் நவீனமாத்திரைகள் எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை மனச்சோர்வையும் தீர்க்கின்றன.
எதிர்மறை எண்ணங்களை நிராகரித்தல்
எதிர்மறை எண்ணங்கள் தொடர்ச்சிசயாக ஏற்பட்டு அவையே எமது வாழ்வின் அங்கமாகவும் ஒரு பழக்கமாகவும் மாறிவருவதால் அவை எமது துயரமனநிலையை தக்கவைத்து மனச்சோர்வினை ஏற்படுத்துகின்றன. இவற்றினை அடையாளம் கண்டு நிராகரிப்பதன் மூலம் யதார்த்தமான நேர் எண்ணங்களை எம்மில் ஏற்படுத்த வேண்டும் இதன் மூலம் சுயஇரக்கத்தினை தவிர்த்து தன்னம்பிக்கையினை ஏற்படுத்தி மனச்சோர்வில் இருந்து விடுபடவழியமைத்தல் வேண்டும்.
எதிர்மறை எண்ணங்களைக்கையாளுதல்.....
எமது எண்ணங்களே எமது மனோபலத்திற்கும் ஆழமான காரணமாக அமைகின்றன எண்ணங்கள் எமது மனவெளியினை நிறைத்து நிற்கும் பொழுது எமது முகபாவத்தினை பெருமளவில் நிர்ணயிக்கின்றன எதிர்மறை எண்ணங்களை அடிக்கடி ஏற்படுத்துவதே சகஜமே ஆனால் அவற்றில் ஊன்றிக்கவனம் எடுக்கும்போது அவையே வாழ்வின் முழுவதுமாகி எமது அகப்பார்வையினை மாற்றிவிடுகின்றன இதனால் உறவுகளுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டு எங்களை நாம் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு விடுவதால் தோனும் வழியில் போகின்றது.எனவே எதிர்மறை எண்ணங்களில் விடுபடுதல் என்பது. மிகமிகமுக்கியமானதொரு செயற்பாடாகும் ஆனால் மனச்சோர்வுக்கு உட்பட்ட ஒருவர் எதிர்மறையான எண்ணங்களையெல்லாம் தனது மனோபலத்திற்கு உட்பட்டது என்பதை உணரவேண்டும்.
ஒருவர் தான் பலவீனமானவர் என்றும் தன்னால் எதுவுமே செய்யமுடியாது என்றும் கையாலாகத தனத்துடன் திரும்பத்திரும்ப சிந்திப்பாராயின் அவரால் எதையும் செய்யமுடியாமல் போகும் சந்தர்ப்பங்கள் அதிகமாகும்.
கீழைத்தேய நாடுகளில் கலாச்சார சமய விழுமியங்கள் உடல் மன ஒருமைப்பாட்டினை மிகவும் வலியுறுத்துகின்றன.
"வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்" என்ற பாடலை கேட்டு இரசித்து இருக்கின்றோம் ஆனால் வாழ்கின்றோமா….? என்றால் இல்லை….
ஆனால் தற்போதைய நவீன யுகத்தில் மனிதனும் இயந்திரமாகிவிட்தால் மணிதமாண்பு பண்பு அன்பு இரக்கம் இவையனைத்தும் இழந்தவச்களாய் தனிமையிலும் தனிப்பட்டே வாழப்பழகிக்கொண்டு இருப்பதால் தான் தற்கொலைகள் அதிகமாகியுள்ளது.மெய்ஞானத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் இடையில் மனிதவர்க்கம் செய்யவேண்டியுள்ளது அஞ்ஞானவாசம்.
தற்கொலையினை தடுப்பதற்கு சிலஅணுகுமுறைகள் என்றால் ஒவ்வொருவருக்கும் இடையில் நல்லபுரிந்துணர்வு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ஆழமான நட்பும் நம்பிக்கையும் கூட்டாகஇணைந்து செயலாற்றும் திறன் சமத்துவமான பொதுநலச்சிந்தனை இவையனைத்தினையும் எமது இளையதலைமுறையினர் வாழ்வாககொண்டால் அந்த வாழ்வு இனிதே….
உன் சாதனைக்கு நீ போடும் எல்லை
நீ மேற்கொள்ளும் தற்கொலை
வாழ்வானது ஒரு முறை….
வாழ்த்தட்டுமே தலைமுறை…..
-இளம்கவிஞர்-வை.கஜேந்திரன்-
மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகள் காரணம் என்ன….???
Reviewed by Author
on
June 24, 2017
Rating:

No comments:
Post a Comment