மூன்றாம் தவணைக் கடன் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் ஆராய்கிறது....
சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள மூன்றாம் தவணைக் கடன் தொகை தொடர்பாக அடுத்த மாதம் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 1.5 பில்லியன் டொலர்கள் கடன்தொகையின் மூன்றாம் தவணை தொகை அடுத்தமாதம் வழங்கப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கடன்தொகை இலங்கைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் சிலக்கோரிக்கைகள் இலங்கையால் நிறைவேற்றப்படாத காரணத்தினால் கடன்தொகை வழங்கப்படுவது தாமதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் வாரத்தில் இடம்பெறவுள்ள நாணயநிதியத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இலங்கைக்கான மூன்றாம் தவணைக் கொடுப்பனவை வழங்குவது தொடர்பாக தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தவணைக் கடன் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் ஆராய்கிறது....
Reviewed by Author
on
June 27, 2017
Rating:

No comments:
Post a Comment