அண்மைய செய்திகள்

recent
-

உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாரிய தீ விபத்துக்கள்....


அண்மையில் மேற்கு லண்டனில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து சம்பவம் முழு உலகையும் அதிர்ச்சியில் ஆழ்ந்த்தியுள்ளது.

24 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஏற்பட்ட தீ அனர்த்தம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உலக அளவில் நடைபெற்ற ஐந்து பெரிய தீ விபத்துக்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

2017 ஆண்டு ஜனவரி மாதம் ஈரானில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பலர் உயிரிழந்தனர்.

ஈரான் தலைநகரில் 17 மாடிகளை பிளாஸ்கோ கட்டடத்தில் ஏற்பட்ட தீ பரம்பலால், 18 தீயணைப்பு வீரர்கள் உள்பட பலர் உயிரிழந்தனர். இந்தக் கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்திற்கு முன்னரே பாதுகாப்பற்றதாக இக்கட்டடம் குறிப்பிடப்பட்டிருந்தது.
2015ம் ஆண்டு மே மாதம் பாகு, அஜர்பைஜான் குடியிருப்புக் கட்டத்தில் ஏற்பட்ட தீயால், 5 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாயினர். கட்டடத்தின் மீது வேயப்பட்டிருந்த உலோகமே தீ பரவியதற்கு காரணமாக கூறப்பட்டது.
2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் டுபாயிலுள்ள உலகில் மிகவும் உயரமான குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 79 மாடி கொண்ட வானளாவிய கட்ட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட வேண்டியதாயிற்று.
2014 செப்டெம்பர் மாதம் ரஸ்யாவின் கிராஸ்நோயாஸ்க் நகரில் அமைந்துள்ள 25 மாடிகளை கொண்ட கட்டடம் தீயால் சேதமடைந்தது. அதிலிருந்து 115 குடியிருப்புவாசிகளும் அதனைவிட்டு வெளியேறி விட்டனர். உயிரிழப்பு இல்லை.
2010ம் ஆண்டு நவம்பர் மாதம் சீனா ஷாங்காயிலுள்ள 28 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீயால், 53 பேர் பலியாயினர். 90 பேர் காயமடைந்தனர். இந்த விபத்திற்கு உரிமம் பெறாத வெல்டர்கள் காரணம் என்று சீன அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாரிய தீ விபத்துக்கள்.... Reviewed by Author on June 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.