வெளிச்சம் அறக்கட்டளை மற்றும் வவுனியா வடக்கு கல்வி வலயம்...
வெளிச்சம் அறக்கட்டளை மற்றும் வவுனியா வடக்கு கல்வி வலயம் இணைந்து வவுனியா வடக்கின் 50 ற்கும் மேற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 700 ற்கும் மேற்பட்ட தரம் 05 ல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஒருநாள் புலமைப்பரிசில் செயலமர்வு பன்றிக்கெய்தகுளம் அ.த.க.பாடசாலை, புதுக்குளம் கனிஸ்டவித்தியாலயம், தரணிக்குளம் ஆ.பாடசாலை , பாரதிதாசன் வித்தியாலயம் , புளியங்குளம் ஆ.பாடசாலை, ஒலுமடு அ.த.க.பாடசாலை , கனகராஜன்குளம் மகாவித்தியாலயம் ஆகிய 07 மையங்களில் ஒருங்கிணைத்து நடாத்தப்பட்டது.
பன்றிக்கெய்த குளம் பாடசாலையில் உதவிக்கல்விப்பணிப்பாளர் ஆர் . நவரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் மாவட்ட சமூகசேவை அதிகாரி செ.ஸ்ரீநிவாசன் விசேட விருந்தினராகக் கலந்து கொண்டார் .வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் பா. லம்போதரன் செயலாளர் தி. கார்த்திக் பொருளாளர் ஆசிரிய ஆலோசகர் திருமதி எஸ் சிவகுமாரன் ஆகியோருடன் பல ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
தலைமையுரை ஆற்றிய உதவிக்கல்விப்பணிப்பாளர் அவர்கள் வடக்கு வலயம் வறுமையான மாணவர்களை அதிகம் கொண்டுள்ளது. இங்கு மாணவர்களுக்கு மேலதிக கற்கை வசதிகள் குறைவு. இன்று வெளிச்சம் பவுண்டேசன் இந்த தேவையை அறிந்து சேவையாற்றியதற்கு நன்றி தெரிவித்தார் மேலும் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் தனது ஆசியுரையில் வறுமையை ஒழிக்கும் ஆண்டாக இந்த வருடம் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள வேளையில் இம்மாணவர்களுக்கு இப்படியான சேவை பாராட்டத்தக்கது எனக்குறிப்பிட்டார். வளவாளர்களாக ஆசிரியர்களான இ.பகீரதன் , க.சந்திரகுமார் ம.முரளீதரன், அ.பாலசுந்தரம் , இ.சசிக்குமார் திருமதி சிவகுமாரன் ஆகியோர் கடமையாற்றினர் அத்துடன் மாணவர்களுக்கு கையேடும் உணவுப்பொருட்களும் வெளிச்சம் அறக்கட்டளையால்
வெளிச்சம் அறக்கட்டளை மற்றும் வவுனியா வடக்கு கல்வி வலயம்...
Reviewed by NEWMANNAR
on
July 04, 2017
Rating:

No comments:
Post a Comment