அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச செயலாளரின் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறது

வீட்டுத்திட்டத்தில் பெயரிடப்பட்டு பின்னர் புறக்கணிக்கப்பட்டவர்களின் அறவழி சனநாயக போராட்டத்தை மனிதாபிமானத்துடன் அனுகாமல் பாதிக்கப்பட்ட மக்கள் மீது பொலிசாரைக் கொண்டு சட்டநடவடிக்கை எடுக்கமுற்பட்டதும். அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்துடன் அவர்களுடன் ஆரோக்கியமான கலந்துரையாடல் நடாத்தவும் இயல்பாக முன்வரவில்லை .


சாமானிய மக்களுக்கு தமது அடிப்படை விருப்பு வெறுப்புக்களை கடந்து மனிதாபிமானத்துடன் செயலாற்ற வேண்டியவர்கள். இவ்வாறு பொதுமக்கள் மத்தியில் உணர்ச்சிவசப்பட்டு அநாகரீகமாக நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல.

தமது அடிப்படை உரிமைக்காக சனநாயக போராட்டம் நடாத்துபவர்கள் மீது வன்முறை வாதத்தை பிரயோகித்து அகற்ற முனைவது சனநாயக படுகொலை ஆகும்.

அரச ஊழியர்கள் பொது மக்களுக்கு பணி செய்வதற்காகவே அரசு பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து ஊதியம் வழங்குகின்றது என்பதை இவர்கள் பல சந்தர்ப்பங்களில் மறந்துவிடுகிறார்கள் என்பது வேதனைக்குரிய விடயம்.

ஆகவே இனிமேலாவது சாமனிய மக்களையும் மனிதர்களாக மதித்து அவர்களது உரிமைக்கும் உணர்வுகளுக்கும் உரிய மரியாதையை பிரதேச செயலாளர் வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.
எனவே மனிதாபிமானத்துடன் பொதுமக்களை தெளிவுபடுத்திய மேலதிக அரசாங்க அதிபர் அவர்களுக்கு எமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி.
பொது அமைப்புக்களின் ஒன்றியம்.
மன்னார் மாவட்டம்
மன்னார் பிரதேச செயலாளரின் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறது Reviewed by NEWMANNAR on July 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.