மன்னார் மாவட்டத்தின் சித்தவைத்திய கலாநிதி செல்வமகேந்திரனுக்கு 05 விருதுகள்......(photos)
மன்னார் மாவட்டத்தின் நீண்டகாலமாக சுவர்ணா கிளினிக் மூலம் சித்தமருத்துவத்துவத்தில் பாணியாற்றும் சித்தவைத்திய கலாநிதி DR. செல்லத்துரை செல்வமகேந்திரன் அவர்களுக்கு 28-05- 2017 அன்று கொழும்பு சர்வதேச மாநாட்டுமண்டபத்தில் வைத்து சர்வதேச சமாதான சங்கமும் சர்வதேச மருத்துவர் சங்கமும் இணைந்து
- கீர்த்தி ஸ்ரீ
- தேசபந்து
- ஹெல வெத இசீ
- வைத்திய அபிமானி ஆகிய தேசிய விருதுகளும் தங்கப்பதக்கங்களும் அத்துடன் "வைத்திய ரத்னா" எனும் சர்வதேச விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இவ்விருதுகளைப்பெற்று மன்னாருக்கு பெருமைசேர்த்துள்ள சித்தவைத்திய கலாநிதி செல்வமகேந்திரனுக்கு நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி வரவேற்று பாராட்டுகின்றோம்,
மன்னாரில் இருந்து இப்படி ஒரே தடவையில் 05 விருதுகளைப்பெறும் இரண்டாவது சித்தவைத்தியகலாநிதி இவராவர் இதற்கு முதல் சித்தவைத்திய கலாநிதி DR,செ.லோகநாதன் அவர்களும் இவ்விருதுகளைப்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-வை.கஜேந்திரன் -

மன்னார் மாவட்டத்தின் சித்தவைத்திய கலாநிதி செல்வமகேந்திரனுக்கு 05 விருதுகள்......(photos)
Reviewed by Author
on
July 28, 2017
Rating:

No comments:
Post a Comment