மட்டக்களப்பு கல்லடியில் அருள் தரும் ஈழ்த்திருச்செந்தூர் முருகன் ஆலயம்....
மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பில் திருச்செந்தூர் கிராமத்தில் எழுந்தருளி
அருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஈழத்துத்திருச்செந்தூர் முருகன்
ஆலயத்தின் சுருக்க வரலாறே
கடலை நோக்கி வலது கரத்தை நீக்கி அதோ..... தெரிகிற திருச்செந்தூரில் தான் நான் இருக்கின்றேன் இவ்வழியால் நான் கதிர்காமத்துக்கு போவது வழக்கம்
இப்போதும் கதிர்காமத்திற்கு போவதற்குத்தான் வந்தேன் வழக்கம் போல இப்பனைமரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றேன் நீயாவது இவ்விடத்தில் எனக்கோர் ஓலைக்கொட்டிலையாவது கட்டினால் இங்கு சில நாட்கள் தரித்து நின்று ஓய்வெடுத்து செல்ல வசதியாக இருக்கும் முடிந்தால் அதைச்செய் என்று கூறியதும் சுவாமி ஓங்காரனந்த சரஸ்வதி சுவாமிகளின் கனவு நிலை மாறி ந்னவு நிலை தோன்றியது தனது கனவில் வந்தது முருகப்பெருமான் தான் என்பதை உணர்ந்தவராய்
கனவில் தோன்றிய இடத்தில் நின்ற பனைமரத்தடிக்குச்சென்றார் அங்கு கிடந்த சல்லிக்கற்களை புறக்கி தான் கொண்டு சென்ற சீமெந்தினையும் சேர்த்து மேடையமைத்தார் தானே செதுக்கிய பிள்ளையார் திருவுருச்சிலையினை வைத்து பிரதிஸ்டை செய்தார் அன்றிலிருந்து அந்த பனைமரத்தடி பிள்ளையார் வணக்கவழிபாட்டிடமாக மாறியது.ஒருவருடம் கடந்த நிலையில் இலங்கைக்கு வருகை தந்த கவியோகி சுவாமி சுத்தானந்த பாரதியார் மட்டக்களப்புக்கு ம் வருகை தந்திரந்தரர் ஓங்காரந்த சரஸ்வதி அவர்களினதும் சில அன்பர்களினதும் அழைப்பின் பேரில் கல்லடி தபோவனத்துக்கு அவர்களினதும் சில அன்பர்களினதும் அழைப்பின் பேரில் கல்லடி தபோவனத்துக்கு
வருகை தந்தார் அந்த பனைமரத்தடியில் ஒரு ஓலைக்கொட்டிலை கோயிலாக அமைத்து ஒரு வேலும் செய்து எடுத்தார்கள் சுவாமி பாராதியாருடன் வேலையும் மேளவாத்தியத்துடனும் கூட்டுப்பிராத்தினையுடனும் அழைத்து வந்தார்கள்
சுவாமி சுத்தானந்த பாரதியார் யாக பூஜை எல்லாம் செய்து வேலை ஓலைக்கொட்டிலில் இருந்த மேடையில் பிரதிஷ்டை செய்தார் அன்று முதல் இந்த ஆலயம் ஈழத்துத்திருச்செந்தூர் முருகன் ஆலயம் என அழைக்கப்படலாயிற்று. இது நடந்தது 1966 ஆம் வைகாசி மாதமாக இருக்கலாம்
- 1978ம் ஆண்டு 11 மாதம் வீசிய சூறாவளியில் ஆலயம் முழுமையாக இடிந்து விழுந்தது ஓலைக்கொட்டிலுக்குப் பதிலாக ஒரு சிறிய கல்லால் அறை கட்டுவது தீர்மானம் அது பெரிய கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா 22- 10- 1980 நடைபெற்றது.
- 1882 ஆலயம் புதுப்பொலிவு பெற்றது முற்புறத்தில் திருச்செந்தூர் முருகனின் திருவுருத்தினையும் ஆலயத்தின் தோற்றத்தினையும் வரைந்து கொண்டிருந்த ஓவியர் செல்வம் அவர்கள்28- 06- 1983 அன்று ஓவியத்தை முடித்து மதியச்சாப்பிட்டிற்கு பிறகு வந்து முருகனின் திருவுருவத்தில் உள்ள கண்களைத்திறப்போம் என எண்ணிச்சாப்பிடச்சென்று விட்டார் என்ன அற்புதம் வந்து பார்த்தபொழுது முருகனின் திருவுருத்தில் இரு கண்களும் திறக்கப்பட்டிருந்தது.
அன்றிலிருந்து "கண்திறந்த விழா" வருடா வருடம் கொண்டாடப்படுகின்றது
- 05-07-1984 ல் மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது சுவாமி ஓங்காரனந்தா சரஸ்வதி அவர்களே அனைத்து கிரிகைகளையும் செய்தார்.
- 1986 தேர் கட்டும் பணி பலரும் ஒத்துழைப்புடன் ஆரம்பமானது.
- 05-06- 2002 ல் முதன் முதலாக அழகிய சித்திரத்தேரில் ஈழத்துச்செந்தூர் முருகப்பெருமான் அமர்ந்து வீதியுலா வந்த காட்ச்சி எல்லோரையும் பரவசத்தில் ஆழ்த்தியது (இத்தருணத்தில் சுவாமியின் உடல்நிலை தளர்ந்தது அவரின் சீடர்களான சி,சபேசன்.சி.நிரோசன் சகோதரர்களே ஆலயத்தின் அனைத்து பூஜை கலையும் செய்து வந்தார்கள்)
- 2004 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அளவில் சுவாமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை 20- 11- 2004 அன்று அதிகாலை சுவாமி ஓங்காரான்ந்த சரஸ்வதி அவர்கள் மகா சமாதிநிலை அடைந்தார்கள்.
- 26- 12- 2004 ஆந்திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை ஆலயத்தையும் தபோவனத்தனையும் சுற்றுமதிலையும் சேதப்படுத்தியது ஆனாலும் முருகப்பெருமானின் வந்தமர்ந்த பனைமரமும் அழகிய சித்திரத்தேரும் சுவாமி ஓங்காரநந்த சரஸ்வதி அவர்களின் சமாதியும் எவ்விதமான சேதமும் இன்றி இருந்ததை பார்த்து எல்லோரும் ஆச்சரியம் அடைந்தனர் ஆலயத்தினுல் பூஜை செய்து கொண்டிருந்த சுவாமியின் சீடர்களும் கழுத்தளவு கடல் நீரில் தத்தளித்தபோதும் காப்பாற்றப்பட்டமையை எண்ணி முருகப்பெருமானின் பெருமையை மெய்சிலிர்த்தார்கள்
மேற்கு புறவாயிலை கொண்டிருந்த ஆலயம் சுனாமியினால்சேதமடைந்தது மூலஸ்தானம் திரும்பியதால் புதிய ஆலயத்தை கிழக்கு வாயிலுடன் நிர்மானிக்க வேண்டுமென முடிவுசெய்யப்பட்டு அடிக்கல் நாட்டபட்டது
- 23-06- 2010 மீண்டும் மகாகும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது தொடர்ந்து 47 மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்றன
- 10-08- 2010ல் சங்காபிஷேகம் இனிதே நடைபெற்ற்து.
கலியுக கந்தனின் புதுமைகள் இன்னும் ஏராளம்,,,,,
மட்டக்களப்புக்கு சென்றால் மற்க்காமல் திருச்செந்தூர் முருகனின் தரிசனம் பெறுங்கள் தடைகள் விலகும் தனிசிறப்பு கிடைக்கும்
தொகுப்பு- வை.கஜேந்திரன் -
மட்டக்களப்புக்கு சென்றால் மற்க்காமல் திருச்செந்தூர் முருகனின் தரிசனம் பெறுங்கள் தடைகள் விலகும் தனிசிறப்பு கிடைக்கும்
தொகுப்பு- வை.கஜேந்திரன் -
மட்டக்களப்பு கல்லடியில் அருள் தரும் ஈழ்த்திருச்செந்தூர் முருகன் ஆலயம்....
Reviewed by Author
on
July 28, 2017
Rating:

No comments:
Post a Comment