உலகில் தினமும் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மட்டும் 100 கோடி....
உலகின் பிரபல குறுந்தகவல் செயலி என்பதை வாட்ஸ்அப் புதிய புள்ளி விவரங்கள் தெளிவுப்படுத்தியுள்ளது. அந்நிறுவனத்தின் புதிய அறிவிப்பில் உலகில் தினமும் 100 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் தினமும் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மட்டும் 100 கோடி
சான்பிரான்சிஸ்கோ:
உலகில் வாட்ஸ்அப் செய்வோர் எண்ணிக்கை தினசரி அடிப்படையில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. வாட்ஸ்அப் சமீபத்திய தகவல்களில் தினமும் 100 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி மாதந்தோரும் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியாக இருந்தது.
ஸ்நாப்சாட் ஸ்டோரீஸ் போன்ற வாட்ஸ்அப் அம்சமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் தினமும் 25 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இது ஸ்நாப்சாட் செயலியை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் வலைதளத்தில் அந்நிறுவனத்தின் பதிவில் மாதந்திர அடிப்படையில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 130 கோடி ஆகும். மொத்தம் 60 மொழிகள் சப்போர்ட் செய்வதோடு தினமும் 550 கோடி குறுந்தகவல்களும், 100 கோடி வீடியோக்களும், 450 கோடி புகைப்படங்கள் தினமும் வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொள்ளுப்படுகிறது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சத்தினை தினமும் சுமார் 25 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்நாப்சாட் செயலியினை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 16.6 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய மைல்கல் சாதனையை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு மேலும் பயனுள்ள அம்சங்களை மிகவும் எளிமையாகவும், அதிக பாதுகாப்புடன் வழங்குவோம் என வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரி ஜான் ஜௌம் தெரிவித்துள்ளார்.

உலகில் தினமும் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மட்டும் 100 கோடி....
Reviewed by Author
on
July 29, 2017
Rating:

No comments:
Post a Comment