இலங்கை அணியில் உள்ள குறைகளை பற்றி...... இலங்கை ஜாம்பவான்
இலங்கை அணியில் உள்ள குறைகளை பற்றி சுழற்பந்து ஜாம்பவானும், இலங்கை அணியின் முன்னாள் வீரருமான முத்தையா முரளிதரன் வெளிப்படையாக கூறியுள்ளார்.
இலங்கை வந்துள்ள இந்திய அணி, முதலில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இப்போட்டியில் இலங்கை அணியின் இளம் வீரர்கள் பொறுப்பில்லாமல் செயல்படுவதாக முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முரளிதரன் கூறுகையில், இலங்கை மண்ணில் இதுவரை நடக்காத செயலை கத்துக்குட்டி சிம்பாப்வே அணி நிகழ்த்தி சென்றுவிட்டது.
இந்நிலையில், பலமான இந்திய அணியை இந்த இளம் வீரர்கள் எப்படி சமாளிக்க முடியும். இளம் வீரர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் அணிக்கு நல்லது.
பல மூத்த வீரர்களின் ஓய்வு, நிலையில்லாத அணி, இதெல்லாம் மாறாத வரை இலங்கை அணி சர்வதேச அளவில் சாதிக்க முடியாது என முரளிதரன் கூறியுள்ளார்.
இலங்கை அணியில் உள்ள குறைகளை பற்றி...... இலங்கை ஜாம்பவான்
Reviewed by Author
on
July 29, 2017
Rating:

No comments:
Post a Comment