நெடுவாசலில் 107வது நாளாக தொடர் போராட்டம்: கண்டுகொள்ளாத அரசு
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் 106வது நாளாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 12ம் திகதி முதல் நடைபெற்று வரும் இரண்டாவது கட்ட போராட்டத்தில் பொதுமக்கள் பலரும் பங்கேற்று வருகின்றனர்.
நாள்தோறும் நூதன போராட்டங்களை நடத்தி வரும் மக்கள், நேற்றைய தினம் மத்திய மாநில அரசுகளை கல்லால் அடித்து விரட்டுவது போல் சித்தரித்தனர்.
இதற்கு முன்பாக கடவுளிடம் மனு கொடுத்து போராடினர், “கடவுளே நீயாவது எங்கள் விவசாய நிலங்களை காப்பாற்று, எங்களை வாழ விடு” என்று கதறினர்.
நூறு நாட்களை தாண்டியும் போராட்டம் நடந்து வரும் நிலையில் மாநில அரசு கண்டும்காணாமல் இருப்பது வேதனையளிப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நெடுவாசலில் 107வது நாளாக தொடர் போராட்டம்: கண்டுகொள்ளாத அரசு
Reviewed by Author
on
July 27, 2017
Rating:

No comments:
Post a Comment