அண்மைய செய்திகள்

recent
-

நடுக்கடலில் தத்தளித்த அகதிகள் படகு: இதுவரை 2200 அகதிகள் உயிரிழந்துள்ளார்கள்....


ஐரோப்பியா நோக்கி Mediterranean கடலில் சென்று கொண்டிருந்த ரப்பர் படகில் பயணித்த 13 அகதிகள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து அதிகளவிலான அகதிகள் சட்ட விரோதமாக Mediterranean கடல் வழியாக ஐரோப்பாவை அடைவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அப்படி இரு தினங்களுக்கு முன்னர் Mediterranean கடல் வழியாக ரப்பர் படகில் அதிகளவிலான அகதிகள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.


லிபியா வழியாக படகு வந்து கொண்டிருந்த போது பாரம் தாங்காமல் படகிலிருந்த கர்ப்பிணி பெண், குழந்தைகள் உட்பட 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள்.

இறந்தவர்களின் சடலங்கள் தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்டு அகதிகள் பயணித்த படகிலேயே மீண்டும் வைக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் உயிருக்கு போராடிய 167 அகதிகளை பத்திரமாக மீட்டார்கள்.

இதனிடையில், இந்த வருடத்தில் இதுவரை 2200 அகதிகள் Mediterranean கடல் வழியாக ஐரோப்பியாவை அடையும் முயற்சியின் போது உயிரிழந்துள்ளார்கள் என்ற தகவலை அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ளது.

நடுக்கடலில் தத்தளித்த அகதிகள் படகு: இதுவரை 2200 அகதிகள் உயிரிழந்துள்ளார்கள்.... Reviewed by Author on July 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.