கேப்டனாக குறைந்த இன்னிங்சில் 10 சதம் அடித்து கோலி சாதனை.....
இந்திய அணி கேப்டன் விராட் கோலி காலே டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் குறைந்த இன்னிங்சில் 10 சதம் அடித்த இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் 3 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, 2-வது இன்னிங்சில் அவுட்டாகாமல் 103 ரன்கள் குவித்தார். இந்த சதம் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 17-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
17-வது சதம் மூலம் கங்குலியை பின்னுக்குத் தள்ளியுள்ளார். தற்போது லஷ்மண், வென்சர்கார் ஆகியோருடன் உள்ளார். அசாருதீன் 22 சதங்களும், சேவாக் 23 சதங்களும், கவாஸ்கர் 34 சதங்களும், டிராவிட் 36 சதங்களும், சச்சின் தெண்டுல்கர் 51 சதங்களும் அடித்து முன்னணியில் உள்ளனர்.
கேப்டனாக விராட் கோலிக்கு இது 10-வது சதமாகும். இந்த சதத்தை அவர் 44 இன்னிங்சில் அடித்து குறைந்த இன்னிங்சில் 10 சதங்கள் அடித்த கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். அசாருதீன் 74 இன்னிங்சில் 11 சதங்கள் அடித்துள்ளார். அவர் 68 இன்னிங்சில் 10 சதங்களும், சச்சின் தெண்டுல்கர் 43 இன்னிங்சில் 6 சதங்களும் அடித்துள்ளனர்.
கேப்டனாக குறைந்த இன்னிங்சில் 10 சதம் அடித்து கோலி சாதனை.....
Reviewed by Author
on
July 31, 2017
Rating:

No comments:
Post a Comment