அண்மைய செய்திகள்

recent
-

சாதனை வீரருக்கு ஏற்பட்ட பரிதாபம்....


ஒரே இன்னிங்சில் 1009 ஓட்டங்கள் சேர்த்து சாதனைப் படைத்த மாணவனுக்கு, உறுதியளித்த உதவித்தொகையை வழங்குவதில் மும்பை கிரிக்கெட் வாரியம் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி ஒன்றில் பிரனவ் தனவாடே என்ற 17 வயது மாணவன் 1009 ஓட்டங்களை ஒரே இன்னிங்சில் சேர்த்து சாதனைப் படைத்தார்.

அவருக்கு மும்பை கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் இருந்து 5 வருடங்களுக்குத் தொடர்ச்சியாக ரூ.10,000 மாதாந்திர உதவித்தொகை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த ஒரு வருடகாலத்திற்கு உதவித்தொகையை மும்பை கிரிக்கெட் கவுன்சில் வழங்கியுள்ளது. ஆனால் இந்த வருடம் தொடங்கியதிலிருந்து இதுவரை 6 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையிலும் இன்னும் உதவித்தொகை வழங்கப்படவில்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெரும் சிரமத்திற்குள்ளான பிரனவ்வின் தந்தை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலில் இதை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மும்பை கிரிக்கெட் கவுன்சிலிங் தலைமை அதிகாரி உமேஷ் கான்வில்கர் அளித்த விளக்கத்தில், உதவித்தொகை அறிவித்தது உண்மைதான். ஆனால் வருடம் தோறும் அவரின் விளையாட்டு திறன் மற்றும் கல்வித்திறன் ஆய்வு செய்யப்பட்டு அதனடிப்படையில் தான் உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த வருடத்திற்கான ஆய்வு முடிவுகள் இன்னும் கிடைக்கப்படவில்லை என்பதால் உதவித்தொகை வழங்கப்படுவது இன்னும் முடிவுசெய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

சாதனை வீரருக்கு ஏற்பட்ட பரிதாபம்.... Reviewed by Author on July 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.