காணாமல் போதல்களில் இருந்து பாதுகாப்பு பெறும் சாசனம் நடாளுமன்றத்தில் முன்வைக்கப்படாது...
குறித்த சட்டமூலம் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.
இந்த நிலையில், இராணுவத்தினருக்கு எதிரான குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படக் கூடாது என முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க உள்ளிட்ட முன்னாள் இராணுவ அதிகாரிகள் மலவத்து மற்றும் மாநாயக்க தேரர்களிடம் நேற்று முறையிட்டனர்.
அத்துடன், சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பில் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, குறித்த சட்டமூலத்தை இன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போதல்களில் இருந்து பாதுகாப்பு பெறும் சாசனம் நடாளுமன்றத்தில் முன்வைக்கப்படாது...
Reviewed by Author
on
July 05, 2017
Rating:

No comments:
Post a Comment