மும்மொழிக் கற்கை நிலையத்தின் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
2017 மற்றும் 2018ஆம் கல்வியாண்டு மாணவர்களுக்கான சிங்கள, தமிழ் ஆங்கிலக் கற்கை நெறி வகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளன.
வடமாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கிவரும் மும்மொழிக் கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் அந்த கற்கை நெறி வகுப்புக்கள் ஆரம்பிக்கவுள்ளன.
குறித்த கற்கை நெறியில் இணைய விரும்புவோர் யாழ். கலட்டி மெதடிஸ்தமிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையில் அமைந்துள்ள மும்மொழிக் கற்கை நிலையத்தில் அல்லது www.edumin.np.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாகவோ விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பங்களை பூரணப்படுத்துவோர் "மும்மொழிக் கற்கைகள் நிலையம்", இராமநாதன் வீதி, கலட்டி மெதடிஸ்தமிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை, கலட்டி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயங்களை வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளதுடன், எதிர்வரும் 20ஆம் திகதி விண்ணப்ப முடிவுத் திகதியெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மும்மொழிக் கற்கை நிலையத்தின் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
Reviewed by Author
on
July 01, 2017
Rating:

No comments:
Post a Comment