அண்மைய செய்திகள்

recent
-

5,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது....மலேசியாவில் தொடரும் சோதனை:


மலேசியாவில் வேலை செய்வதற்கான முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் 5000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் முறையாக பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு, அந்நாட்டு அரசாங்கம் காலக்கெடு நிர்ணயித்தது.

இது கடந்த 30-ஆம் திகதியோடு முடிவடைந்ததால், அந்நாட்டு குடிவரவுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனையின் போது 5,065 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் 1,520 பேர் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 1,476 பேர் இந்தோனேசியர்கள் எனவும், 429 பேர் மியான்மர் எனவும், 285 பேர் வியாட்நாம், 206 பேர் தாய்லாந்து மற்றும், 261 பேர் பிலிப்பைன்சைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மலேசிய குடிவரவுத்துறையின் இயக்குநர் ஜெனரல் முஸ்தாபர் அலி கூறுகையில், மொத்தம் 17,955 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பணி ஆவணங்களற்ற 5,065 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காகப் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 108 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

5,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது....மலேசியாவில் தொடரும் சோதனை: Reviewed by Author on July 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.